பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




306

அப்பாத்துரையம் - 2

தனால், அது காங்கிரசால் வேண்டும்போது பயன்படுத்தி, வேண்டாதபோது சுருட்டி வைத்துக்கொள்ளும் ஒரு வாலாகவே நடைபெற முடிகிறது. தமிழக எல்லைக்காகப் போராடும் போதும் அது காங்கிரசு அரசியலை எதிர்த்துத் தாக்கும் ஆற்றல் இல்லாததாலேயே நினைத்தபடி எதுவும் முடிக்கமுடியாமல் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு வகையிலும் இரண்டாம் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது அது மற்றக் கட்சிகளுடன் பெயரளவில் இணைவதாகக் காட்டிக்கொண்டாலும், தன் வலுவையோ ஆர்வத்தையோ அதில் மிகுதியும் காட்ட முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் தமிழ்நாட்டின் முழுப் பொருளும் விளங்க வேண்டுமானால், அது கோரும் திராவிட நாட்டின் முழுப்பொருளையும் நன்கு உணர்தல் வேண்டும். ஏனெனில், இரண்டு குறிக்கோளும் ஒரே இனக் குறிக்கோளின் இருபுறங்களேயாகும்.

இரண்டையும் சேர்த்துக் கீழ்வருமாறு விளக்கலாம்.

ஒன்று: திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் தமிழ்நாடு அகில இந்தியக் கட்சி கோரும் தமிழ்நாடன்று. தமிழக 'வாக்குரிமை' மூலம் கொடுத்த உரிமையன்றி, தமிழக அரசியலுக்கு வேறு எந்த உரிமையும் அது கோரும் தமிழ் நாட்டில் இராது. அதுகோரும் தமிழ் நாட்டுச் சட்டமன்றத்தின் ஆற்றல் இங்கிலாந்தில் பாராளுமன்றத்துக்கு இருக்கும் ஆற்றல். அந்த மன்றமே யாருக்காவது அல்லது எந்தக் கட்சிக்காவது தன் ஆற்றலைப் பகிர்ந்து கொடுத்தாலல்லாமல் அதற்கு மேற்பட்ட ஆற்றலாக, இயற்கையின் ஆற்றலன்றி வேறு எந்த ஆற்றலும் இராது.

இரண்டு: திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் திராவிட நாட்டில் தமிழ்நாடு மட்டுமன்றி, ஆந்திர நாடும், கருநாடக நாடும், கேரளநாடும், துளு நாடும் அடங்கியுள்ளன. ஆனால், அது கோரும் ஆந்திரநாடு, இன்று ஆந்திரர் பெற்றுள்ள ஆந்திர நாடன்று, மேற்கூறிய தமிழ்நாட்டைப் போலவே முழுநிறை உரிமைபெற்ற, தில்லி மேலுரிமையோ அல்லது வேறு எவர் மேலுரிமையோ அற்ற ஆந்திரநாடு ஆகும். அந்த ஆந்திரநாட்டுச்