பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

307

சட்டமன்றமே ஆந்திரர் ஆட்சிக்கு முழுப்பொறுப்பு வகிக்கும் ஆந்திரப் பாராளுமன்றமாய் இருக்கும்.

காங்கிரசு ஆட்சியை எதிர்த்துக் காங்கிரசுக்காரரே போரிட்டு அதன் பிறகு அமைந்துள்ள ஆந்திரமும், கேரளமும், னியமையவிருக்கும் கருநாடகமும். தமிழகமும், துளுவமும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும், தமிழகமும், துளுவமும்! முழுநிறை விடுதலை யுரிமையும் தன்னாட்சியும் தில்லி மேலுரிமையோ, வேறு எந்த மேலுரிமையோ அற்ற நாடுகளாய் அவை இருக்கவேண்டுமென்று திராவிட மறுமலர்ச்சி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.

மூன்று : இந்த ஐந்து முழுநிறை உரிமை பெற்ற நாடுகளும் தத்தம் பாராளுமன்றம், அமைச்சரவை, அரசியல் உரிமைகளுடன் தனித்தனி முழு உரிமை நாடுகளாக உலகில் இயங்கும்.

நான்கு : இந்த ஐந்து நாடுகளும் சரிசம அடிப்படையில் பொது இன உரிமை, பொது நல விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலே மட்டுமே ஒன்றுபட்டுக் கூடி, தாம் விரும்பிய முறையில் கூட்டுறவு அமைத்து, அக்கூட்டுறவு அரசியலைத் தாம் விரும்பிய முறையில் கட்டமைத்து, அதற்குத் தாம் விரும்பிய உரிமைகளையே கொடுக்கும்.

ஐந்து : இந்தியக் கூட்டுறவில் மய்ய ஆட்சியே மேலாட்சியும் மேலுரிமையும் உடையது. ஆனால், திராவிடக் கூட்டுறவில் உரிமைகள் யாவும் மொழி நாடுகளிலேயே இருக்கும். அவற்றின் ஒத்துழைப்பால் ஏற்பட்ட மொழி ஆட்சி மேலாட்சி யாய் இராது. அவற்றுடன் ஒத்துழைக்கும் பொது ஆட்சியாகவே இருக்கும். அதன் ஒவ்வொரு செயலும் நாட்டாட்சிகளின்

பெற்றதாகவே இருக்கும்.

ணக்கம்

ஆறு : இந்தியக் கூட்டுறவு இன அடிப்படையில் அமைந்ததன்று. அஃது ஒரு தேசிய இனமாக இயங்கவும் முடியாது. அதனாலேயே அது மாகாணங்களின் உரிமைகள் என்றால் அஞ்சுகிறது. மாகாணங்களை மொழியடிப்படையில் அமைக்கவும் அஞ்சுகிறது. மொழியடிப்படையான உண்மைத் தேசியங்கள் தம் போலிப் பொதுத் தேசியத்தை உடைத்துவிடும்