பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




308

அப்பாத்துரையம் – 2

என்பது இப் போலித் தேசியவாதிகளின் ஓயாத கிலி. திராவிடக் கூட்டுறவுக்கு இந்த அச்சம் எதுவும் இராது. ஏனெனில், இந்தியக் கூட்டுறவில் இனம், கூட்டுறவுக்கு எதிராகச் செயலாற்றுகிறது. திராவிடக் கூட்டுறவில் இனம், கூட்டுறவுக்குச் சாதகமாகத் தானாகச் செயலாற்றிவிடும்.

ஏழு : இந்தியக் கூட்டுறவில் தனிமனிதப் போட்டியும் சரி, மாகாணப் போட்டியும் சரி தேசிய இன ஆர்வம் என்ற அன்பிணைப்பு இல்லாத, பொதுக் குறிக்கோளில்லாத பொறாமைப் போட்டி ஆகும். சுதந்தரத்துக்கு முன்பே இப் பொறாமைதான், முசுலிம் பகுதிகளான இன்றைய பாகிஸ்தான் பரப்பில் தொழில் வளர்க்காமல், இந்துப் பகுதிகளான இன்றைய இந்தியா யாவிலேயே தொழில் வளர்த்தது. இதனாலும், வட இந்தியாவிலே முசுலிம்களுக்கு இடம்தரும் உருதுவைப் பகைத்து இந்தியை வலியுறுத்தியதனாலும் பாகிஸ்தான் பிரிய நேர்ந்தது. இதே பொறாமைப் போட்டி, இந்தியக் கூட்டுறவின் மாகாணங் களிடையே இன்றும் நிலவுகிறது. தென் மாகாணங்களைப் பொறுத்தவரையில் இப் பொறாமைப் போட்டி, அயலினப் பகைமைச் செயலாகவே நடைபெறுகிறது. இந்த இனவேறுபாடு காங்கிரசில் மாறாப் பற்றுள்ள பெருந்தலைவர்களையும் பெரியவர்களையுமே உறுத்திவருகின்றது.

பம்பாயில் 'தாஜ்மகால்' ஓட்டலை விலைக்கு வாங்க எண்ணிய பாரிஸ்டர் திரு.அழகப்ப செட்டியாரை வடக்கத்திய முதலாளிகள் திரண்டு உருட்டிவிட்ட செய்தி; இந்தியில் படமெடுக்கும் முயற்சியில், பம்பாய் அரசியலார் ‘ஆனந்த விகடன்' உரிமையாளரான திரு.ஜெமினி எஸ்.எஸ்.வாசனுக்குத் தந்த இடி ஆகியவற்றையும்; மைசூரில் அரசாங்கம் நடத்த முன் வந்த மோட்டார்த் தொழிலுக்கு இணக்கம் மறுத்து, வடவர்க்கு அது கொடுத்தது; குடியாட்சியில் மக்கள் உயிர் நிலையாகிய பத்திரிகைகளையும் உண்டி விடுதிகளையும் வடநாட்டவர் கைப்பற்றி வருவது; சோப்பு, சிமிட்டித் தொழில்களைத் தென்னாட்டிலும் டாட்டா, பிர்லா, டால்மியாக்களுக்கே உரிமையாக்கி வருவது; ஐந்தாண்டுத் திட்டத்தால் தென்னாட்டை ஆசியாவில் ஓர் 'ஆசியா' வாக்கி, வடநாட்டைக் கீழ்த்திசை ‘அமெரிக்கா' ஆக்கிவருவது ஆகிய செயல்கள் அறிவுக்