பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

309

குருடராக்கப் பட்டுள்ள தமிழர்க்கும் உணர்ச்சியூட்டும் காட்சிகளாகப் பெருகி வருகின்றன.

இந்தப் பொறாமை, பகைமை, தன்னலப் போட்டிகள் திராவிட மறுமலர்ச்சி இயக்கம் கோரும் தென்னாட்டில் ருக்கமாட்டா. ஏனெனில், ஒவ்வொரு மொழி நாடும்; தன் முழு ஆற்றலும் வளர்த்து, உலக வாணிகத்திலும், தொழிலிலும் ஒன்றுக்கு ஐந்தாக இடம்பெறும்படி ஊக்கப்படும்.

‘எல்லாரும் ஒரு நிறம் எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் இந்நாட்டு மக்கள்

என்ற உணர்ச்சி மொழி காரணமாக; மொழி நாடுகளில்

வளர்க்கப்படுவதுடன்,

மொழி

தென்னாடெங்கும் வளர்க்கப்படும்.

இனம் காரணமாகத்

கடைசியாக, “தமிழ்நாடு' குறிக்கோளும் 'திராவிடநாடு' குறிக்கோளும் இணைக்கப்படுவானேன். முழு நிறை தமிழகம் போதாதா?” என்ற கேள்வி சிலரிடம் எழக் கூடும்.

இதன் விடையும் இணைவுக் குறிக்கோளின் விளக்கமாகவே அமைவது. ஆதலால், அதில் தமிழர் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.

முதலாவது:தில்லியை எதிர்த்துத் தமிழகம் தனித்து நின்று முழு நிறை விடுதலைபெற முடியுமென்றே வைத்துக்கொள்வோம். தமிழகம் அப்போது மொழியடிப்படையில் அமைந்த ஒரு நாடாயிருக்குமேயன்றி, இன அடிப்படையில் அமைந்த இயற்கைத் தேசியமாய் அமையாது. தமிழ் இனம் மொழி யடிப்படையாகவே அமைந்ததானாலும், அது மொழி கடந்து வளர்ந்துவிட்டது. அந்த வளர்ச்சி உண்மையில் இமய எல்லை யளாவி, அதற்கப்பாலும் பரந்திருந்த காலம் உண்டு. ஆனால், அதன் இனவளர்ச்சியின் உயிர்த்துடிப்புக் குன்றியபின் அஃது இமய எல்லையை விட்டு விந்திய எல்லைக்கும், விந்திய எல்லையைவிட்டு ஐந்து மொழி நாடுகள் எல்லைக்கும், பின் வடவேங்கடம் தென்குமரி குண குடக் கடல் எல்லைக்கும், அதன்பின் குடகடல் எல்லைவிட்டு மலை எல்லைக்கும், நம்