பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




310 ||

அப்பாத்துரையம் - 2

நாளில் இதனினும் குறுகியுமே வந்துள்ளது காணலாம். இனப் பற்றற்ற காரணத்தாலேயே, கொடுந்தமிழ் நிலம் என்று எல்லைப் புறங்களைப் பழித்ததனாலேயே, தமிழகமும் தமிழினமும் தேய்ந்து பிற இனங்களுக்கும் மொழிகளுக்கும் நாடுகளுக்கும் பணிய நேர்ந்தது. இன அடிப்படையையும் பண்பாட்டடிப் படையையும் தமிழகம் இன்று பேணாமற் போனால், முழு நிறை உரிமை பெற்றாலும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழகம் நீடித்து நிற்க முடியாது. கிரேக்க, உரோம இனங்கள் போல, சால்டிய, எகிப்திய இனங்கள் போல, அழிந் தொழியவே நேரும்.

இது தமிழகத்துக்கு மட்டும்தானே நட்டம்? ஆந்திரரும், கன்னடியரும், மலையாளிகளும் இதற்காகத் தமிழருடன் சேருவரா - சேர ஆர்வம் கொள்ளுவரா? என்று நேர்மையுள்ளம் படைத்த தமிழர் கட்டாயம் கேட்பர்.

எல்லையிழந்தது தமிழகம் மட்டுமன்று அன்பரே, தமிழினம் முழுவதுமே! ஆந்திரப் பேரரசர் ஆண்ட முக்கலிங்கம் எவை என்பதை ஆந்திரர் ன்று மறந்துவிட்டனர். வங்கக் குடாக்கடலில் மேற்கிலுள்ள வட தென்னாடு தென்னாடு ஒரு கலிங்கம் - இது மேல் கலிங்கம். வங்காளம் உள்ளடக்கிய கங்கைச் சமவெளி ஒரு கலிங்கம் - இது வட கலிங்கம். பர்மா ஒரு கலிங்கம் - இது கீழ்க் கலிங்கம். இம் மூன்றும் சேர்ந்ததே முக்கலிங்கம். இஃது ஆந்திரரின் அரசியல் விரிவு. ஆனால் 11ஆம் நூற்றாண்டில் சோடகங்கர் ஒரிசாவை ஆண்டபோது, அங்கே பேசப்பட்ட மொழி தெலுங்கே. சோடகங்கர் தெலுங்குப் புலவரை ஆதரிக்காமல் தமிழ்ப் புலவரை ஆதரித்தனர் என்றும் பள்ளிகளில்கூடத் தாய்மொழியாகிய தெலுங்கை அமிழ்த்தித் தமிழைப் புகுத்தினர் என்றும் அந்நாட்டு வரலாறு குறிப் பிடுகிறது.

ஆந்திர மொழி வழங்கிய ஒரிசாவின் வடவரினக் கலப்பாலேயே இன்றும் அரைத் திராவிட - அரை ஆரிய மொழியாகிய ஒரிசா பிரிந்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஒரிசா மாகாணம் அமைந்தது. அச்சமயம் சென்னை மாகாணத்தின் வடகோடியில்