பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

311

விசாகப்பட்டினம்

ருந்த கஞ்சம் மாவட்டத்தையும் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திரர் இழந்தனர். அப் பகுதிகளில் தெலுங்கு பேசுபவரும் பண்டைத் திராவிட மொழிகளான கோண்டு,கூயி பேசுபவர்களும்தாம் மிகுதி. ஆனால், இன்று கேரளத்தை வளப்படுத்தத் தேவிகுளம், பீர்மேடு தமிழரிடமிருந்து வட ஏகாதிபத்தியத்தால் பிடுங்கப்பட்டது போல, அன்று அதே ஏகாதிபத்தியத்தால் ஒரிசாவை வளப்படுத்தக் கஞ்சம், விசாகப்பட்டினம் பகுதிகள் திராவிட ஆந்திரரிடமிருந்து பறிக்கப்பட்டன.

மராட்டிய ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழி பேசிய பகுதியிலும் கன்னட மொழி பேசிய பகுதியிலும் மராட்டிய மொழி பரவிற்று என்று கன்னட, தெலுங்கு மொழி வரலாறுகள் கூறுகின்றன. மராத்திய நாட்டில் 'தெலாங்' என்ற பெயருடைய வர்கள் பலர் முன் தெலுங்கராயிருந்து மராத்தியரானவர்களே.

மராட்டியரும் குஜராத்தியரும்கூட, இதுபோல வட ஆரியரால் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டனர் என்றும் தெற்கே கிடைத்த புது நிலத்தைவிட அவர்கள் வடக்கே இழந்த எல்லை பெரிது என்றும் மராட்டிய, குஜராத்திய வரலாறுகள் குறிக்கின்றன.

மலையாள நாடு சங்க காலத்தில் தமிழ்நாடாக இருந்ததை நம்மில் பலர் அறியமாட்டார். ஆனால், அதை அறிபவர்கள்கூட அந்தப் பழைய மலையாளமாகிய தமிழ்மொழி எல்லை, இன்றைய மங்களூர் எல்லை தாண்டிச் சென்றிருந்தது என்பதைக் கவனித்தால், மலையாள மொழி வடக்கே எவ்வளவு கோட்டை விட்டிருக்கிறது என்று காணலாம்.

தமிழினத்தவர் ஒத்துழைப்பின்றித் தமிழர் தனித்து ஒரு நாடாக வாழலாம். ஆனால், இது சிலநாள் வாழ்வாகவே இருக்கும். அதுபோலவே தமிழக ஒத்துழைப்பின்றி, தமிழின நாடுகள் சிலகாலம் நாடாக வாழலாம். ஆனால், இதுவும் சிலநாள் வாழ்வாகவே இருக்க முடியும். தமிழினக் கூட்டுறவால் இந்நாடுகளின் வாழ்வு படிப்படியாக விரிவுறுவதுடன், அவற்றின் பண்பாடும் எதிர்பாரா வளர்ச்சியடையும்.