பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

313

மற்றும் ஐந்து மொழி நாடுகளிடையே உள்ள மக்கள் தொடர்பு ஆட்சித் தொடர்பு, வரலாற்றுத் தொடர்பு, நாகரிகப் பண்பாட்டுத் தொடர்புகள் பல. அவை தனி நூலாக எழுதப்படின், தென்னகப் புது வாழ்வுக்கு மிகவும் பயன்படுவதாகும். ஒரு தேசியத் தமிழாட்சியிலும் திராவிடக் கூட்டாட்சியிலும் மட்டுமே இவற்றை ஊக்க முடியும். அத்தகைய புரட்சிகரமான தொடர்புகளுக்கு ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டும் கூறுவோம்.

ஒன்று : மலையாள நாட்டுக் கவிஞன் எழுத்தச்சன்தான் தென்னா டெங்கும் - தமிழகம் உட்பட - திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினான் என்பது. திண்ணைப் பள்ளிகளுக் காகவே பிற்கால ஔவையார் ஆத்திசூடி முதலிய பள்ளி வகுப்புப் பாட ஏடுகள் எழுதினார்.

இரண்டு : சோழர் குடி இளைஞரும் பாண்டியர் குடி இளைஞரும் கன்னட நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் தனித்தனி நாடுகள் கண்டு ஆண்டனர் என்பது.

கன்னட

மூன்று : இன்று தமிழருடன் தமிழராகக் கலந்துவிட்ட களப்பிரர் இரண்டாயிர ஆண்டுகட்கு முன் நாட்டிலிருந்து தமிழகத்துக்குள் வந்து புகுந்த முல்லைநில நாகரிகத்தவர் என்பது.

இப்பண்பெல்லை விரிவால் இந்திய மாநில எல்லையி லுள்ள மற்ற மொழி நாடுகளும் இன்றைய அறிவற்ற வடதிசை ஏகாதிபத்தியத்தில் நலிவதுபோல, நலியாமல், சோழப் பேரரசின் ஆட்சியில் அடைந்த அதே புதுத் தேசிய ஆற்றல் பெற்று வளரும்.

இன்னொரு திசையில் கடல் கடந்த தமிழர் வாழ்வும் அவர்கள் வளமும் ஆப்பிரிக்க, தென்கிழக்காசிய, இலங்கைப் பகுதிகளும் சோழப் பேரரசாட்சியில் கண்டதுபோலவே மீண்டும் தென்திசை வளங்காணும்.

தமிழக- தென்னாட்டு இணைவுக் குறிக்கோள் இங்ஙனம் இணைவுக் குறிக்கோள் மட்டுமன்று; தேசியக் குறிக்கோள்; தேசியங் கடந்த கீழ்த்திசை மறுமலர்ச்சிக் குறிக்கோள் ஆகும்.