பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. குடியாட்சி

கடமை என்ற சொல்லுக்குத் தமிழில் வரி என்ற பொருளும் உண்டு. ஒரு நாட்டில் குடியுரிமையாளன் ஆட்சியாளர்க்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமை வரியே என்பதை இது நினைவூட்டுகிறது.

ஆனால், ஆளப்படுபவன் கடமை, வரி மட்டுமன்று. ஆளப்படுதல் என்ற சொல்லே மற்றொரு கடமையைக் குறித்துக் காட்டுகிறது. அவன் சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க ஒத்துக் கொள்ளுதல் வேண்டும். கட்டுப் படத் தவறு பவர்களுக்குத் தண்டனை தரப்படுவதையும் அவன் ஒத்துக்கொள்வது இயல்பு.

இந்த இரண்டு கடமைகளுக்கும் நேரொப்பான உரிமையே குடியுரிமை என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பொதுவாக, கடமையை நினைக்கும் அளவுகூட, இந்த உரிமையைப்பற்றி ஆளப்படுபவர் நினைப்பதில்லை. காரணம் அவை தனி மனிதன் வாழ்வு தொடங்கு முன்னும் முடிந்த பின்னும் நடை பெறுவதே. ஆற்றில் ஓடும் நீரைப்போல, வெட்டவெளியில் நிலவும் காற்றைப் போல அவை நாகரிக உலகில் மனிதனுக்கு இயல்பாகிவிட்டன. ஆனால், ஆற்றில் நீர் வற்றினாலும் வெள்ளமாகப் பொங்கி எழுந்தாலும் நீர் பற்றிய கவலை எழுவது உறுதி. காற்று இனிய தென்றலானாலும் சூறாவளியானாலும் அதைப்பற்றிய எண்ணம் உண்டாகாமல் இராது. அதுபோல், ஆட்சி பொதுநிலை கடந்து மிக நல்ல ஆட்சியானாலும், பொது நிலையால் குறைபட்டு மிக மோசமான ஆட்சி யானாலும் குடியுரிமை பற்றிய பேச்சு கட்டாயமாக எழுந்துவிடும். அரசியல் குழப்ப நிலை ஏற்பட்ட காலத்தில் வாணிகம் தடைப்படும். தொழில்கள் கெடும். உழவு