பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




318

அப்பாத்துரையம் - 2

பதுங்கியிருந்து பின் சீறிப் பரபரவென்று சுற்றுகிறது. இதன் கோர உருவைக் கண்ட மகாராஷ்டிரத் தலைவர்கள் அதன் இயல்பைப் படம் பிடித்து நமக்குக் காட்டியுள்ளனர். அதில் இனம், தேசிய இனம் ஆகியவற்றின் பண்பு காணாததனால், அவர்கள் அதை 'உள் நாட்டு ஏகாதிபத்தியம்' என்று குறித்தார்கள்!.

குடியாட்சியில் உரிமைகள் கீழிருந்து மேலே செல்லும். தேசிய ஆட்சியில் உரிமை, மக்கள் ஆர்வத்திலிருந்து தோன்றி ஆட்சியின் விருப்பமாகவும் கடமையாகவும் உரிமையாகவும் மிளிரும். இவ்விரண்டு பண்பும் உள்ள கூட்டாட்சியில் மக்கள் உரிமையிலிருந்து தனியரசு உரிமைகளும், தனியரசு உரிமை களிலிருந்து கூட்டரசு அல்லது மய்ய அரசு உரிமைகளும் பிறக்கும். ஆனால், இந்திய ஏகாதிபத்தியம் கண்டுபிடித்த முறை இதற்கு நேர் தலைகீழானது. மய்ய ஆட்சி ஏகாதிபத்திய ஆட்சியாய், அது வகுத்த உரிமையால், அதன் அடிமையாய்த் தனியரசுகள் செயலாற்றுகின்றன.

குடியாட்சியில் அடிப்படை அரசியற் சட்டத்தை ஆக்கும் உரிமை மட்டுமன்றி, அழிக்கும் உரிமையும், மாற்றியமைக்கும் உரிமையும் மக்களுக்கு உண்டு. கூட்டுக் குடியாட்சியில் இந்த உரிமை மக்களுக்கு முதலிலும், தனியரசுகளுக்கு அதன் பின்னும், இறுதியிலேயே மய்ய அரசுக்கும் இருத்தல் வேண்டும். ஆனால், இந்தியக் கூட்டாட்சியில் அரசியல் சட்டம் அடிமையாட்சிக் காலத்தில் அமைந்தது. அஃது அமைப்பதற்கென்று தேர்தல்கூட நடத்தப்படவில்லை. மக்கள் விருப்பப்படி இஃது அமையவில்லை. அத்துடன் அதனை ஏற்கும் உரிமையும், மறுக்கும் உரிமையும், மாற்றியமைக்கும் உரிமையும் மக்களுக்கோ, தனியரசுகளுக்கோ தரப்பட வில்லை.

இது து சிறப்பாகத் தமிழகத்துக்கும் பொதுவாகத் தென்னாட்டுக்கும் அநீதியாகும். ஏனென்றால், தமிழகம் உட்பட்டதென்னாடுமொழிவேறுபாடும்,அதனிலும்அடிப்படைப் பண்பான இன வேறுபாடும் உடையது. தென்னாடும் தமிழகமும் அமையாமலே இயற்றப்பட்ட சட்டம் தென்னாட்டின் தனி மதிப்பையும் உரிமையையும் அவமதிப்பதாகும்.

தேசியக் கூட்டுக் குடியாட்சியில் எல்லா மொழிகளுக்கும் இனங்களுக்கும் சம உரிமையும், சிறுபான்மை இனங்களுக்குச்