பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

319

சலுகையும் பாதுகாப்பும் அளிக்கப் படும். இந்தியக் கூட்டுறவில் பெரும்பாலும் சிறுபான்மை இனமாயிருந்த இசுலாமியப் பகுதி, இந்த உரிமைகள் தில்லி ஏகாதிபத்தியத்திடம் கிடைக்காது என்பதைக் காங்கிரசின் போக்கிலிருந்து அறிந்ததனாலேயே பிரிவினை முழக்கம் செய்து பிரிவுற்றது. தென்னாட்டிலும் காங்கிரசுவாதிகள் இந்தக் குடியாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, அது கிடைக்காவிட்டால் பிரிவினைக்கு உழைத்திருத்தல் வேண்டும். அவர்கள் அடிமைத்தனமும் பதவியார்வமுமே இதற்குத் தடையாய் இருந்துவந்துள்ளன, வருகின்றன. இனப் பிரச்சினையே இல்லாத மராட்டியரும் பஞ்சாபியரும் வங்காளிகளும் கூடத் தென்னாட்டு அகில இந்தியக் கட்சியினரளவு மக்கட்பற்று, தேசியப்பற்று அற்றவர்களாயிருக்க முடியவில்லை என்பதை வட இந்தியச் சூழ்நிலை காட்டுகிறது. மராட்டியப் பகுதியான பம்பாய் மராட்டிய நாட்டில் சேர்க்கப்படவில்லை என்றவுடனே பதவியைத் துறந்த பம்பாய் முதல்வரின் தேசிய வீரம் எங்கே? பதவிக்காகத் தேவிகுளம், பீர்மேட்டை விட்டுக்கொடுத்துத் தமிழரிடம் வீம்பு பேசும் பச்சைத் தமிழனெங்கே?

சி

குடியாட்சியில் கட்சிகள் இருக்குமிடத்தில் மக்கள் உரிமை எதிர்க்கட்சி உரிமையேயாகும். ஆனாலும், கட்சி எப்போதும் தன் குற்றங்களை, குறைபாடுகளை உணர முடியாது.மக்கள் அவற்றில் கருத்துச் செலுத்தித் தம் சிந்தனையுரிமை, வாதிடும்உரிமை, பேச்சுரிமை, கண்டனஉரிமை ஆகியவற்றைச் செயலாற்றவும் ஆட்சி மாற்றவும் வாய்ப்பளிப்பது எதிர்க்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளே. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும்கட்சி விளக்கம் தரலாமே தவிர, தண்டிக்கக் கூடாது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் காங்கிரசு எப்படி நடத்தப்பட்டதோ, அதைவிட மோசமாக எதிர்க்கட்சிகள் காங்கிரசு ஆட்சி யினரால் நடத்தப்படுகின்றன.எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற கட்சியினர், காங்கிரசுக்குள்ளேயே கருத்து வேற்றுமை யுடையவர், தத்தம் தேசியச் சார்பாகப் பேசும் நல்ல காங்கிரசுவாதிகள் ஆகியவருக்கும் வாய்ப் பூட்டு, கைப்பூட்டுகள் தரப்படுகின்றன. உண்மையில் காங்கிரசு ஆட்சி என்பது மய்யத்திலும், மாகாணத் தனியரசுகளிலும், ஒரு சில தன்னலக் காரர் - தங்கள் குடும்ப நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஆட்சியை