பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




320

அப்பாத்துரையம் - 2

அணுக ஒட்டாமல் தடுத்து ஆளும் கொடுங்கோலர் ஆட்சியாகவே இருக்கிறது. அது மட்டுமன்று, பொது மக்கள் உரிமைகளைச் சுரண்டும் முதலாளிகள் ஆட்சியாகவும், முதலாளிகளுக் குள்ளே ஒரு சில பெரு முதலாளிகளை ஆதரித்து மற்றவர்கள் நலன்களை நசுக்கி, அப்பெரு முதலாளிகளுடன் பேரம் செய்து ஆட்சியுரிமையை அவர் களுக்குத் தந்து அவர்கள் ஆதாயத்தில் ஊதியப் பங்கு (கமிஷன்) பெறும் கூலி ஆட்சியாகவும், கள்ள வாணிகம், கொள்ளை ஆதாயம் ஆகியவற்றைச் சட்டத்தின் உதவிகொண்டே மறைமுகமாக ஆதரித்து ஆளும் ஆட்சியாகவும் இருக்கிறது. தமிழகத் தென்கோடியிலுள்ள நகரங்களில் வெற்றிலை பாக்குக் கடையின் தொழிலுரிமை (permit licence) களையும், மக்கள் உரிமைகளையும், நாட்டு உரிமைகளையும் வடநாட்டு ஆட்சியாளரிடமிருந்து ஒருங்கே சூறையாடுகின்றனர்.

பிரிட்டனிடமிருந்து பெற்ற விடுதலை காங்கிரசுக்கு மட்டும் விடுதலை என்ற எண்ணத்தில் காங்கிரசுக்காரர் தாங்களே சாசுவதமாக ஆள எண்ணி, ஆளும் வாய்ப்பு முழுவதையும் தேர்தலில் எப்படியாவது எதிர்க்கட்சியை வரவிடாமல் செய்யவே பயன்படுத்துகின்றனர். காங்கிரசு தேர்தல் பிரச்சாரத் துக்காகவே தேசியத் திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் அதிகாரிகள் நடுநிலைமை, போலீஸ் நடுநிலைமை, நீதிபதிகள் நடுநிலைமை ஆகிய எதுவும் பேணப்படுவதில்லை. பிரிட்டன் ஆட்சியில் மக்களிடையே இருந்த அடிமைப்பண்பு மேன்மேலும் நீரூற்றி வளர்க்கப்படுகிறது. கைக்கூலியை ஒழிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டே, அப்பயிர் களையாக, காடாக வளர்க்கப் பெறுகின்றது. இதனை எடுத்துக் காட்டுபவர்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. அதிகாரிகள் அவர்களைப் பழி வாங்குகின்றனர். காங்கிரசிலேயே நல்லெண்ணமுடையவர் களுக்கு-விடுதலைப் போராட்டத் தழும்புடையவர்களுக்கு, ஆட்சியில் எத்தகைய இடமும் கிடையாது. சன்னியாசிகளுக்கு மக்கள் மதிப்புக் கொடுப்பதறிந்த திருடர்கள், சன்னியாசிப் பண்புடையவரை ஒழித்து அவ்வுடையில் காட்சி தருவது போல, ஆளும் உரிமை காங்கிரசுக்கு என்று அறிந்தவுடன், தேசப் பற்றுடையவரை எல்லாம் காங்கிரசிலிருந்து துரத்தி, பதவிவேட்டைக் கும்பல்கள், முதலாளித்துவத்திலும் அநீதி