பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

321

முதலாளித்துவம் மேற்கொண்ட படுசுரண்டல்காரர்கள் அப்போர்வையில் புகுந்து நாட்டாட்சியைக் காட்டாட்சியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழன், தென்னாட்டினர் என்ற தேசிய உரிமைகள் மட்டுமல்ல பறிபோவது. மனிதன், இந்தியன், ஆசியாக்காரன் என்ற உரிமைக்கும் வரவர ஆபத்துப் பெருகிக் கொண்டுதான் வருகிறது. இவற்றை எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டுமன்றிப் பழம்பெரும் காங்கிரசுத் தலைவர்களே-வயிறும் தன்னலமும் வேலை செய்வதில் சிறிது ஓய்வு பெற்று இதயமும் மூளையும் விழிப்புடன் வேலை செய்யும் நேரத்தில், பண்டித ஜவஹர்லால்கூட எடுத்துக் கூறுவதுண்டு.ஆனால், இவற்றுக்கான அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான் - இதற்கு மாற்றும் ஒன்றே ஒன்றுதான்-அதில் எவரும், ஜவஹர்லால் கூடக் கருத்துச் செலுத்துவதில்லை.

பொன்னாட்சியினும் தன்னாட்சிக்கு நிகரன்று என்று

குடியாட்சி நீதியை ஒத்த மற்றொரு நீதியுண்டு. எவ்வளவு நல்லாட்சியாயினும் ஒரே கட்சியாட்சி தன்னாட்சியுமாகாது, நல்லாட்சிகூட ஆகாது என்பதே அது. காங்கிரசு ஆட்சி இப்போதுபோல் கூலியாட்சியாக இல்லாமல் நல்லாட்சியாய் இருந்தால்கூட, அவ்வப்போது எதிர்க்கட்சிகள் ஆண்டாலன்றிக் குடியாட்சிப் பண்பு தென் னாட்டிலும் நிலவாது, வடநாட்டிலும் நிலவாது; ஏனெனில், குடியாட்சிப் பண்பு ஓடுகிற நீர் போன்றது. நீர் எவ்வளவு நல்ல நீரானாலும் கட்டிக்கிடந்தால் மாசடைந்து கெட்டேதீரும். ஆளும் கட்சியின் மாற்றமே குடியாட்சியில் குடி யுரிமைக்குரிய ஒரே எடுத்துக்காட்டு, குடியாட்சிக்குரிய ஒரே பாதுகாப்பு. இதை உணர்ந்தே காந்தியடிகள் ஒரே மாற்று வழியைச் சுட்டிக் காட்டினார். 'காங்கிரசு இப்போது ஆளும் விருப்பம் தவிர, வேறு அரசியல் நோக்கமோ குறிக்கோளோ அற்றது; அதைக் கலைத்துவிடுங்கள். கொள்கை உடையவர் அக்கொள்கை யடிப்படையாக மக்கள் ஆதரவு பெற்றுப் புதுத் தேசியக் கட்சிகள் அமைத்துக் குடியாட்சிப் பண்புப்படி ஆளட்டும் என்றார் காந்தியடிகள்! காந்தியடிகள் பெயரைத் தங்கள் வாணிகத்துக்கு முதலாகவும், வாணிக மதிப்புக் குறியீடு (டிரேட் மார்க்) ஆகவும் பயன்படுத்த விரும்பிய காங்கிரசு