பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




322) ||

அப்பாத்துரையம் - 2

முதலாளிகள் காந்தியடிகளின் நல்லுரை வகையில் கேளாக் காதினர் ஆயினர்.

தமிழா, உன் தேசியப்பற்று, இனப்பற்று மட்டுமன்றி, குடியாட்சிப் பற்றும் தேர்தல்களின்போது செயலாற்றுதல் வேண்டும். தென்னாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலேயே குடியாட்சிப் பண்பு நிலவவேண்டுமானால், ஆட்சிக்காகவும், ஆட்சி ஆதாயத்துக்காகவுமே அமைந்த காங்கிரசு கட்சி யினிடமாக, கொள்கைக்காகப் பாடுபடும் பிற கட்சிகள் மாறிமாறி வந்தாதல் வேண்டும்.

ஆகவே, சிந்தித்துச் செயலாற்று. உன் உரிமை வாழ்வை வளப்படுத்தும் வகையில் உன் சீட்டைப் பயன்படுத்துவாயாக.