பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உண்மையில் பண்புகளல்ல

10. பொருளியல் வாழ்வு

தன்னலத்தை அறவோர் இழித்துப் பேசுவதையும் பொது நலத்தை உயர்த்திப் பேசுவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், பொதுநலமும் தன்னலமும் வேறு வேறு ஒரே பண்பின் இரு கூறுகள்தாம். நாகரிக சமுதாயத்தில் இரண்டும் ஒன்றை ஒன்று பிணைக்கும் இரு திசைப்பட்ட ஒரே பண்பாகும். தனி மனிதனின் பண்பார்ந்த தன்னலமே இனத்தின் பொது நலத்தைப் பேணுகிறது. இனத்தின் பண்பார்ந்த பொதுநலமே தனி மனிதனின் தன்னலத்தையும் பேணிவிடுகிறது.

பண்பார்ந்த தன்னலம் என்பது என்ன?

பொதுவாகத் தன்னலம் என்பது ஒருவன் ‘நான் வாழ்தல் வேண்டும்' என்று கருதுவதே.

தனைச் சிலர் 'நானே வாழ்தல் வேண்டும்' என்று மாற்றிக்கொள்வர். இதுவே இழிந்த தன்னலம். இதன்படிகள் 'வேறொருவரும் வாழக் கூடாது' என்ற காட்சிப்படி, 'பிறன் வாழ்க்கையைக் கெடுத்தாவது நான் வாழ்தல் வேண்டும்' என்ற தன்முனைப்புப் படி, 'பிறர் வாழ்வு கடந்து நான் வாழ்தல் வேண்டும்' என்ற ஆதிக்கப்படி முதலியன. 'பிறர் கூழ்க்கு அலைந்து மாண்டாலும் மாளட்டும், நான் பால் பருகுதல் வேண்டும்' என்பது இம்மரபினரது குறிக்கோள்.

வேறு சிலர் ‘நானும் வாழ்தல் வேண்டும்' எனத் தன்னலக் கூற்றை மாற்றிக்கொள்வர்.'என்ன செய்தாவது நானும் வாழ்பவரைப் போல வாழ்தல் வேண்டும்' என்பது ஆதிக்கவாதியை அண்டிப் பிழைப்பவன் படி, அடிமைப் படி. ‘பிறரும் வாழ்தல் வேண்டும், நானும் வாழ்தல் வேண்டும்' என்பது குடியுரிமை