பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




324

அப்பாத்துரையம் - 2

யாளன் படி. ‘வாழு, வாழவிடு' என்ற மேனாட்டினர் குறிக்கோள் இதுவே! "பிறர் வாழ, நான் வாழ்தல் வேண்டும்; நான்வாழப் பிறர் வாழ்தல் வேண்டும்' என்பதே, இனம் சார்ந்த, தேசியம் சார்ந்த குடியாட்சிப் படிக்குரிய பண்பு.

அதுவே

பண்பார்ந்த தன்னலப்படி பொதுநலத்தில் குறைந்ததன்று. உண்மையில் அதனினும் உயர்ந்தது. ஏனெனில், அது பண்பார்ந்த பொதுநலப்படியும் ஆகும். பொதுநலத்துக்காகப் டுபடும் உத்தமருள் சிலர் தம் வாழ்வைக் கவனிக்காது விட்டுவிடுவதுண்டு. இஃது உயர்ந்த அரிய பண்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கொள்கையளவிலேயே இஃது உயர்ந்தது. செயலில் அவ்வளவு வளம் தருவதன்று. இனமும் உயர்ந்த பண்பார்ந்த இனமாயிருக்கும் இடத்தில் மட்டுமே இது பயன்தரும். தமிழினம் இத்தகைய உயர்ந்த பண்பார்ந்த இனமாய் முன்னாளில் வாழ்ந்தது. தன்னலம் கெடுத்துப் பொதுநலம் பேணிய உத்தமர் இருந்தனர். இவர்கள் தாம் கெட்டும் இனம் வளர்த்தனர். ஆனால், அறிவார்ந்த தமிழினம் அவர்கள் தனி நலம் கெடாமல் பார்த்துவந்தது. திருவள்ளுவர் இத்தகையவர் களையே ஒழுக்கத்து நீத்தார் என்று குறிப்பிட்டார். பின்னாள் களில் தமிழினம் பண்புகெட்ட பின்னும் இந்த 'ஒழுக்கத்து நீத்தார்' மரபு அழியவில்லை. அவர்கள் இன்னும் தமிழினத் துக்காக உழைத்தே வருகின்றனர். ஆனால், அவர்களைக் கண்டுணரும் ஆற்றலற்று, அவர்களைப் பேணும் கடமையும் அற்ற தமிழினம் அவர்கள் உழைப்பாலேயே அழியாமலும், அதே சமயம் அவர்களைப் பேணாததாலேயே தழைக்காமலும் தட்டுக்கெட்டும் நிற்கிறது. அது மட்டுமன்று. உண்மைத் தேசியவாதிக்குரிய மதிப்பை அவ்வேடமிட்ட போலித் தேசியவாதி இன்று கொள்வதுபோல, ஒழுக்கத்து நீத்தார்க்கு முற்காலத் தமிழன் காட்டிய மதிப்பையும் சலுகையையும் அத்தோற்றமுடைய போலிகளுக்குத் தமிழன் தந்து இன்று தன் இனத்தை அழித்துவருகிறான்.

இன வாழ்வில் தனி மனிதன் தன்னலத்தோடு பொதுநலம் பேணினால்தான், இனம் வாழ்வும் வளமும் எய்தும். அதுபோல இனம் கடந்த வாழ்வில் இன்னலுடன் இனம் கடந்த நலனும் பேணினால்தான், இனமும் வாழும், இனம் கடந்த பேரினமும்