பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

1325

வாழும். இன்றைய தமிழன் வாழ்வில், தமிழ் இனம் தன் வாழ்வு வாழாமல் தமிழ்க்குழு மொழி இனம் அல்லது திராவிட இனவாழ்வும் வாழாமல், இந்தியா என்ற போலி இனக் கொள்கையிலே ஈடுபட்டு வாழ்கிறது. இனம் இன்று அவனைப் பேண முடியாது. ஏனென்றால், இனமும் பேரினமும் கடந்த ஓர் இனக் கும்பலிலேயே அவன் வாழ்கிறான்.பண்பார்ந்த தன்னலம், படிப்படியாக விரிந்து செல்கிற தன்னலம் ஒன்றே அவனை இன்று காக்கக்கூடும். தமிழன் இன்று தனிநல அடிமையாக, தன் இன எதிரியாக, பிற னங்களுக்கே தலைவணங்கி வாழ்வதன் காரணம் இதுவே.

தமிழன் சமய, சமுதாய வாழ்விலும், பொருளியல் வாழ்விலும் நாம் இன்றும் தன்னலத்தைக் காணலாம். ஆனால், பண்பார்ந்த தன்னலத்தைக் காணமுடியாது. பண்பார்ந்த பொதுநலத்தைக் காணமுடியாது. தன்னலத்தைக் காணலாம். பொதுநலத்தையும் காணலாம். ஆனால், இந்தப் பொதுநலமே அவன் இனத்தை அழிக்கிறது. ஏனெனில், அது பண்பார்ந்த பொதுநலம் அன்று.

இவையெல்லாம் மாற வேண்டுமானால் தமிழன் அரசியல் ன அரசியலாக மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.

இன்று தமிழன் கொடுக்கும் வரிகளில் உயிர்ப் பகுதியும் பெரும் பகுதியும் நேரே மய்ய ஆட்சியான தில்லிக்குச் சென்றுவிடுகிறது. வாழ்வை அருகே இருந்து கவனிக்கும் சென்னை அரசியலுக்கு அதில் மிகச் சிறு பகுதியே கிடைக்கிறது. தமிழன் ஆற்றும் அரசியல் கடமையின் பெரும் பகுதி வட திசைக்கு அவன் ஆற்றும் கடமையாகப் பயனற்றுத் தொலைந்து போகிறது. ஆனால், அவன் உரிமைகள், கடமைக்குப் பதிலாக அவன் நல்வாழ்வுக்கு வேண்டிய பொறுப்புகள், செலவுகள் ஆகியவற்றைத் தில்லி ஏற்றுக்கொள்ளவில்லை, சென்னைக்கு ஒதுக்கிவிடுகிறது. இங்ஙனம் அரசியலமைப்பில் தமிழன் மூலமான வருவாயெல்லாம் தில்லிக்கு-அவனுக்குரிய செலவெல்லாம் சென்னை ஆற்றுதல் வேண்டும். இக்காரணத்தாலேயே தமிழகத்தில் உழவுக்கு வேண்டிய வசதிகள் வசதிகள் செய்யப்பட முடியவில்லை. கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்யப்படாமல் இருக்கிறது. அத்துடன் வடதிசையிலிருந்து வந்து வாணிகத்தையும்