பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




326

அப்பாத்துரையம் - 2

தொழிலையும் நாட்டு மக்களிடமிருந்து கைப்பற்றும் சுரண்டல் வகுப்பினரை உரிமையற்ற சென்னை அரசியல் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தென்னாட்டுத் தொழில்களை ஊக்கவும் முடியவில்லை.

சென்னை ஆட்சியும் தில்லியாட்சியைப்போலக் காங்கிரசு

ஆட்சியாய் இருக்கும்வரை, வடநாட்டுக் காங்கிரசு தலைவர்களே சென்னைக் காங்கிரசுக்கும் எஜமானர்களாதலால், இனப் பற்றற்றவர்களையே, பதவிக்காகத் தம்மைத் தொங்கிக் கொண்டிருப்பவர்களையே சட்டசபை உறுப்பினர்களாக, காங்கிரசுத் தலைவர்களாக, மந்திரிகளாக நிறுத்த முடிகிறது. இதன் பயனாகத் தென்னாட்டுச் சுரண்டலுக்குத் தென்னாட்டு அரசியலும் உடந்தையாய் இருந்து வருகிறது.

மக்களுள் 100க்கு 85 பேர் படியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படைக் கல்வி தர, அதற்குச் செலவு செய்ய நாதியில்லை. ஆனால், கதர்க்கென்று காந்தியார் புகழை அழித்து அவர் பெயர்க்கு மட்டும் மதிப்புத் தரும் வீண் எண்ணத்தில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் மானியம் தரப்படுகிறது. கைத்தறித் தொழிலாளர்களுக்கு இயல்பாக இருந்துவந்த தென் கிழக்காசிய வாணிகக் களத்தை- ஆலைகளின் போட்டியாலும் மேனாட்டுப் போட்டியாலும் வெல்ல முடியாதிருந்த வாணிக வளத்தை -ஆட்சி தம் கையிலிருக்கும் காரணமாக வடவர் கைப்பற்றி, தென்னாட்டுக்குப் பஞ்சு வாங்கிக் கொடுப்பதிலும் நூல் வாங்கிக் கொடுப்பதிலும், தென்னாட்டுப் பஞ்சையும் நூலையும் ஆடையையும் வாங்கி வெளிநாட்டுக்குக் கொடுப்பதிலும் தாமே தரகராயிருந்து, இருதிசையிலும் குறைந்த விலைக்கு வாங்கி, கூடிய விலைக்கு விற்றுத் தாம் தரகு சம்பாதிப்பதுடன் தென்னாட்டுத் தொழில்களையும் அழித்து வருகின்றனர். ஆனால், இவற்றைக் கெடுப்பதற்கன்றி வளர்க்கப் பணமில்லாத சென்னைக் காங்கிரசு அரசியல் வடநாட்டு அகதிகளுக்கு மட்டும் இராசோபசாரம் செய்ய முடிகிறது.

ஐந்தாண்டுத் திட்டங்களின் பெயரால் வெளிநாடுகளி லிருந்து கோடி, நூறு கோடி, ஆயிரக் கோடிக்கணக்கான பணம் கடன் வாங்கப்படுகிறது. ஒன்றிரண்டு இலட்சங்களைத் தென்னாட்டுக்குச் செலவிட்டுவிட்டு, மிகுதியை வடநாட்டுத்