பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

327

தொழில்களைப் பேரளவில் வளர்த்து அதைக் குபேர நாடாக்கு வதிலேயே செலவழிக்கின்றனர். இவ்வகையில் தென்னாட்டு மக்களை மட்டுமன்றி, தென்னாட்டுக் காங்கிரசுக்காரரையும் மந்திரி, முதன் மந்திரிகளையும் வடநாட்டார் மமதையுடன் அவமதிப்பாக நடத்தத் தயங்கவில்லை. தென்னாட்டவர் மானமும் வாழ்வும் காக்கப்போகும் மக்கள், சிம்மக் குட்டிகளாக வளர்ந்து வருகின்றனர் என்பதைப் பலர் இன்னும் அறியவில்லை. அதனால் தம் அடிமைகள்தாமே என்று நினைத்து இங்குள்ள காங்கிரசுக்காரரையும் காங்கிரஸ் தலைவர்களையும் அவம் திப்பாக நடத்துகிறார்கள். இவ்வகையில் அவர்களுக்குத் தெம்பு தரும் வகையில் தென்னாட்டுக் காங்கிரசுக்கே விபீஷணர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஓ.வி.அளகேசன் முதலியவர்கள் வடநாட்டுக்காக விளம்பரம் செய்கின்றனர்.

உலக வாணிகத்திலே இந்தியாவுக்குப் பெருத்த ஆதாயம் தரும் மிளகு, ரப்பர், மானோசைட், அப்பிரகம், தேயிலை ஆகிய பொருள்கள் தென்னாட்டுக்கே உரியவை. ஆனால், அவற்றின் ஆதாயமும் நலனும் வடநாட்டுக்குச் சொந்தமாய் வருகின்றன. இவற்றை மறைத்து அடிமைப்படுத்தி வளர்க்கும் முறையில் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.

அவற்றில் காட்டப்படும் தென்னாடு வளமில்லாத நாடு என்று பள்ளியிலேயே பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தென்னாட்டுக் கடற்கரை, ஆங்கிலேயர் வரும்வரை, உலக வாணிகத்துக்கு மய்ய இடமாகவும், உலகத் தொழிற் பொருள்கள் உற்பத்தியாகி ஏற்றுமதியாகும் இடமாகவும் இருந்தது. சேரரும் பாண்டியரும் சோழரும் ஆந்திரரும் பெருங் கடற்படைகளை வைத்திருந்தனர். கடல் வாணிகத்தில் மேல் நாடுகளுடனும் கலம் செலுத்தித்தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால், தென்னாட்டின் கடைசிப் பேரரசான விஜயநகரப் பேரரசுக்கும் வடநாட்டிலுள்ள எல்லா அரசு, பேரரசு களுக்கும் கடற் படையும் கிடையாது, கடல் வாணிக வளமும் கிடையாது. அயலார் கீழ்த்திசையை வென்றதற்கே இவ்வட நாட்டுப் பேரரசுகள்தாம் காரணம்.

இது மட்டுமன்று. காங்கிரசு இயக்கத்திலேயே கடலக வாழ்வின் முக்கியத்துவம் அறிந்த பெருந்தலைவர்