பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




328

அப்பாத்துரையம் - 2

வ.உ.சிதம்பரனார் ஒருவரே. அவர் மாபெருந் தொழிற் போராட்டமே சமதர்ம, பொதுவுடைமைக் கட்சிகள் தோன்றக் காரணமாய் இருந்தது. ஆனால், அக்கட்சிகளும் சரி, காங்கிரசும் சரி அவர் பெயரே சொல்வதில்லை. அவர் கப்பல் போராட்டத்தைக் காங்கிரசு மறந்ததுடன் நிற்கவில்லை; மறக்கடிக்க அரும்பாடுபட்டது. அவர் உலகு நீத்த ஆண்டில் காங்கிரசு அவர்க்கு அனுதாபத் தீர்மானம்கூடச் செய்யவில்லை. அது மட்டுமன்று. முதல் முதல் கப்பலோட்டியவன் என்ற அரும்பெருமையைக்கூட, அவர்க்குப் பத்தாண்டுகளுக்குப்பின் வாணிகக் கப்பல் கம்பெனி அமைத்த ஒரு குஜராத்திக்குத் தந்து அவனே முதற் கப்பல் ஓட்டியவன் என்று காங்கிரசு மாநாட்டில் பாராட்டப்பெற்றான். இது வ.உ.சிதம்பரனார் புகழையும் தென்னாட்டினரையும் அவமதிப்பதாயினும், தென்னாட்டுக் காங்கிரசு உறுப்பினர் இதைப் பார்த்துக் கொண்டுதான் வாளா இருந்தார்கள். ஒருவர்கூட மறுக்க முற்படவில்லை.

தென்னாட்டவர் கடல் வரலாற்றுக்குச் சான்றாக இன்றும் பம்பாயின் ஒரு பகுதி ‘மலபார்க் குன்று' என்ற பெயருடன் இயங்குகிறது.சேரர் ஆண்ட காலத்தில் கடற்கொள்ளைக்காரரை அவர்கள் கடற்போரிட்டு வென்றடக்கிய செய்திகள் சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்தில் வருணிக்கப் பட்டுள்ளன.ஆனால், சேரர் ஆட்சிக்குப் பின்னர், கடற்கொள்ளைக்காரர்கள் மேல்கடற்கரை யெங்கும் பரந்தனர். இவர்களுள் பெரும்பாலார் தென்னாட்டு மலையாளிகளாய் இருந்தனர். அவர்கள் பம்பாயிலுள்ள அக்குன்றத்தை மூலதளமாக்கி, பிரிட்டிஷ் ஆட்சிவரை அதைக் கைக்கொண்டிருந்ததால் ‘மலபார்க் குன்று’ என்று ஆங்கிலேயர் அதற்குப் பெயர் கொடுத்தனர்.

விடுதலை இந்தியா புதிதாகக் கப்பல்கள் அமைத்தபோது, கங்கா, சிந்து, தில்லி என்று கடலக மரபற்ற தம் இடங்களைத்தாம் பெருமைப்படுத்தினர். ஜலஉஷா போன்ற வடவர் இலக்கிய மரபும் குறித்தனர். ஆனால் கடற்படையுடைய கடலரசர்களான சேர சோழ பாண்டியர் பெயரோ, கிரேக்கரும் மேனாட்டினரும் புகழ்ந்த உலக வாணிகத் துறைமுகங்களான புகார், முசிறி, தொண்டி ஆகியவற்றின் பெயர்களோ, கடல்கடந்து கலஞ் செலுத்திக் கடற் பேரரசாண்ட பாண்டியன் நெடியோன்