பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

|| 329

பெயரோ, சோழன் இராசேந்திரன் பெயரோ, நம் காலத்தி லேயே கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் பெயரோ, தென்னாட்டு வரலாற்றுப் புகழ், இலக்கியப் புகழ் சான்ற ஆறுகளின் பெயரோ, மலைகளின் பெயரோ இந்திய மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் வீரன் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் பெயரோ, அகில இந்தியக் காங்கிரசுக்கும் அதன் அடிமையான தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கும் தென்படவில்லை.

தமிழனை அவமதித்து, தமிழர் வாழ்வைச் சுரண்டி, தமிழகத்தைத் தங்கள் தேசியத்தின் வேட்டைக் காடாக்கிவரும் மரபினராகிய அகில இந்தியக் கட்சியினரைத் தவிர வேறு எவரும் கட்சிப் பேரால் 1957 வரை தமிழகத் தேர்தலில் நின்றதில்லை. காங்கிரசு மீது தமிழர்க்கு ஏற்பட்ட வெறுப்பே அதற்கு முந்திய தேர்தலில் சுயேச்சையாளர்களைப் பேரளவில் சட்டமன்றங்களுக்கு அனுப்பிற்று, உழைப்பாளர் கட்சி போன்ற புதிய காங்கிரசு எதிர்ப்புக் கட்சியினர்க்கும் வெற்றிதந்தது. ஆனால், மக்கள் காட்டிய குறிப்பையும் ஆர்வத்தையும் இவர்களுள் பலர்-சிறப்பாக மாணிக்கவேலர், இராமசாமிப் படையாட்சி போன்றவர்கள் மந்திரி பதவியாசையால், பண ஆசையால் தகர்த்து எறிந்துவிட்டனர். வரவிருக்கும் தேர்தல்களில், அத்தகையவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் அகில இந்தியக் கட்சிகளை வருங்காலத்தில் இனச் சார்பாகத் திருத்தியமைக்கத் தூண்டவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு.

வரும் தேர்தல்கள் மூலம் தமிழன் தன் குரலை எழுப்பித் தமிழ் நாட்டில் மாறுதல் உண்டுபண்ணினால், அதுவே தென்னாடு முழுவதற்கும் ஒரு மாறுதலாக அமைவது உறுதி. ஏனெனில், சென்ற தேர்தல்களில் தமிழ் மக்களுள் மிகப் பெரும் பான்மையோர் காங்கிரசுக்கு எதிராகவே தங்கள் 'வோட்டை' அளித்ததுபோல, திருகொச்சியிலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் காங் கிரசுக்கு எதிராகவே பெருவாரியான ஆதரவு காட்டப்பட்டது. காங்கிரசு தலைமையின் குடியாட்சிக்கு முரணான தகிடுதத்தங்களாலேயே, சூதாட்ட கோதாட்டங்க ளாலேயே,அங்கே பெயரளவில் காங்கிரசு ஆட்சி நடைபெறுகிறது. வருகிற தேர்தல்களில் இந்தச் சூதாட்டங்களால்கூடக் காங்கிரசு