பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழா,

11. முடிவுரை

நாலாயிர ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்பே, உன்னை ன்று ஆளும் வடவரும் அவர்களை ஆண்ட வெள்ளையரும் ஆடையுடுக்கப் படிக்குமுன்பே, உன் முன்னோர் குடியாட்சி அமைத்துக்கோட்டை நகரங்கள் கட்டி, இலக்கிய இலக்கணமும் இசை முதலிய கலைகளும் இயல்களும் வளர்த்து, ‘கடன்மா’ என்றழைக்கப்பட்ட ஆழ்கடல் கப்பல்களில் எகிப்துக்கும் மலாயாவுக்கும் சீனத்துக்கும் சென்று வாணிகம் செய்துள்ளனர். அந்நாடுகளில் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்பே குடியேறியும் நிலப் பேரரசராகவும் கடற்பேரரசராகவும் ஆண்டுள்ளனர். உன் பேரரசருள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பிய காலப் பாண்டியன் நெடியோன் இமயமலை வரை வென்று நிலப் பேரரசனாகவும், மலாயா, சுமத்ரா முதலிய தென் கிழக்காசிய நாடுகளை வென்று கடற் பேரரசனாகவும் வாழ்ந்தான். அவன் புகழையே வடதிசைப் புராணங்கள் மனுவின் கதையாகவும், மேலையுலக யூதர் விவிலிய ஏடு நோவாவின் கதையாகவும் வருணித்துள்ளன என்று சில வரலாற்றாராய்ச்சியாளர் கருது கின்றனர். யவனருடனும் உரோமருடனும், சீனருடனும் எகிப்தியருடனும் வாணிகம் செய்து உன் முன்னோர் குவித்த பணம் பல்லாயிரம் கோடிப்பொன் என்று வரலாற்றாசிரியர் கணித்துக் காண்கின்றனர். இரண்டாயிர ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் அடி நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு வரும் புதையல் பொன்நாணயங்கள் அவையே.

தமிழா, உன் நாடு தமிழகம் என்ற பெயருடன் வெள்ளையர் வரும்வரை உலகின் செல்வத்தில் முக்கால் பங்கைக் கொண்ட வளமிக்க நாடாய், வெளியார் கால்படாத விடுதலை நாடாய், தமிழ்மொழிவைத்துத் தமிழகம் மட்டுமன்றி நாகரிக உலகெங்கும்