பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




332-

அப்பாத்துரையம் - 2

ஆட்சி செலுத்திய நாடாயிருந்தது. நீ உன் உரிமைக்குப் பிரிட்டிஷ் ஆட்சியில் பாடுபடாமல், வடவர் உரிமைக்குப் பாடுபட்டாய். அரசியல் விழிப்புற்ற உன்னைப் போலன்றி, வட்டித் தொழில் நடத்திய ஒரு சிறு கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். அக் கும்பல் காங்கிரசை மட்டுமின்றி அகில இந்தியக் கட்சி களனைத்தையும் ஆட்டியமைப்பதனால்தான், அக்கட்சிகளி லெல்லாவற்றிலும் நீ தொண்டனாய் இருக்கிறாய். உன் தென்னாட்டுத் தோழரும் தொண்டராயிருக்கின்றனர். தலைமைப் பீடம்

அம் முதலாளிகளின் வடநாட்டுக் கணக்குப் பிள்ளைகளுக்கு ஏகபோகச் சொத்தாய் இருந்து வருகிறது.

நீ எத்தனை நாள் இவற்றைப் பொறுத்திருக்கப் போகிறாய்? உலகாண்ட நாடு அடிவருடிப் பிழைப்பதா? உலகுக்கு நாகரிகம் தந்த நாடு தன் வரலா றறியாமல் தட்டுக்கெடுவதா?

நேற்றுப் பிறந்த, இன்று காலைப் பிறந்த புன்மொழிகள் உன் சீரிய உலகமுதல் மொழிமீது உலகப் புலவர் வள்ளுவர்மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதா?

நீ எழுதும் அஞ்சல் அட்டையைப் பார்! உன்மொழி, உன் னமொழி கிடையாது. நீ கையாளும் துட்டுகளைப் பார்! காலணாவில்கூட உன்மொழி கிடையாது. அஞ்சல் வில்லைகளைப் பார்! அதில் அசோகன் பொறிப்பு உண்டு! இந்திக் கவிஞர் துளசிதாசர் உண்டு காளிதாசன் உண்டு. வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி கிடையாது. தெலுங்குக் கவிஞன் நன்னயன், திக்கணன், வேமனன் கூடக் கிடையாது. பிற தென்னாட்டு முகங்கள், செய்திகள் எதுவும் கிடையாது.

-

தர

பிரிட்டிஷார் உனக்குத் தந்த உரிமைகளையே மறுக்கிறான் வடவன். அதற்கு ஒத்து ஊதும் மடவரை ஆதரிக்கிறான் அந்த மமதை ஆட்சியாளன், தமிழா! இந்த அவமதிப்புச் சின்னங்களை, உன் வரலாற்றில் படர்ந்த களையை வீசியெறிய வீறி எழு! சிங்கக் குருளையே, சிறுத்தையே! சீறி எழு!

உன் நாடு சிறிய நாடு என்பவர் உண்டு. தமிழனே! நீ இல்லாவிட்டால் அவர்கள் நாடு சிறியதாய் விடுமே என்ற கவலை அவர்களுக்கு! நீ அவர்களைப் போலச் சுரண்டல்காரனல்லவே, பெரிய வேட்டைக் காடு விரும்புவதற்கு? அத்துடன் பிற நாட்டை