பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

1333

வெல்பவர்களுக்குத்தான் பெரியநாடு வேண்டும். பாதுகாப்பில் இருந்து நல்லாட்சி நடத்துபவர்களுக்குச் சிறுநாடே சிங்காரநாடு. மேலும் ஒரு பெரிய நாட்டைப் பகைவர்கள் தோற்கடிப்பதுதான் சிரமம். தோற்கடித்தபின் வென்றாளுவது எளிது. ஏனென்றால், அதன் தலைநகரிலேயே அதன் உயிர் அடங்கிவிடும். ஆனால், சின்ன நாட்டைத் தோற்கடிப்பதுதான் எளிது. வென்றடக்க முடியாது. அத்துடன் சிறு நாடு நல்லாட்சி பேணி, குடியாட்சி மரபும் காத்தால், அத்துடன் அஃது இனத் தேசியமாகவும் அமைந்தால், அதன் வலுச் சிறிய வைரத்தின் வலுப்போன்றது. கொல்லுலைக் கூடங்களாலும் அசைக்க முடியாதது.

'பிரிவினை கோராதேடா, தம்பீ! ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே' என்று ஆதிக்கப் புலிகள் வேதாந்தம் பேசும் உன்னிடம், தமிழா!

'அண்ணே, ஒற்றுமையும் சமத்துவமும் அன்பும் இருக்கும் இடத்தில்-ஓரினத் தேசியத்தில்-பிரிவினைக்குரல் எழாது. உயர்வு தாழ்வு வேற்றுமை உள்ள இடத்திலேயே அஃது எழும். ஒத்துழைப்பு உன்னிடம் இருந்தால், பாகிஸ்தான் பிரிந்திருக்குமா!' என்று கேட்டுப் பார்!.

‘ஆண்டான் அடிமை ஒற்றுமை, ஒற்றுமை ஆகுமா? மாகாணங்களிடையே, இனங்களிடையே, மொழிகளிடையே சமத்துவம் இருக்க முடியா விட்டால், பிரிவினைதானே சமநிலை தரும்.

'சமத்துவம் என்றால் என்ன? ஒரு கூட்டு நிலையத்தில் சம பங்காளிகளாய் இருப்பவர்களுள் ஒருவன் இன்னொருவன் பிரியாமல் தடுக்க முடியுமா? நேசம் இருக்கும்வரைதானே கூட்டு நடைபெற முடியும்?

'விரும்பிச் சேர்ந்த அன்புக் கூட்டுறவில் விரும்பினால் பிரியும் உரிமையிருக்குமே, அண்ணே? பிரிவினை உரிமைதானே சமத்துவத்தின் சின்னம், குடியாட்சியின் குறியீடு.

'யாரிடம் கேட்டுக்கொண்டு இந்தியைத் தேசிய மொழியாகச் சட்டம் செய்தாய், அண்ணே? சென்னை சட்டசபையிலாவது கேட்டாயா? தமிழ்நாட்டுக் காங்கிரசிடமாவது கேட்டாயா?”