பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

1335

மொழி மாகாணங்கள் அமைத்து, மாகாண சுய ஆட்சி கொடுத்து, அந்தந்த நாட்டு வரிப்பணத்தில் அந்தந்த நாட்டுத் தேசிய ஆக்க வேலைகளைச் செய்வதுதானே! தேசியம் என்ற பெயரால் ஏழை மாகாணங்களைச் சுரண்டிப் பணக்கார மாகாணங்களைக் கொழுக்க வைப்பானேன்?

இத்தகைய கேள்விகளைக் கேட்டு, இன்னும் அகில ந்தியக் கட்சியிலுள்ளவர்களை அந்தக் கட்சிகளிலிருந்து காண்டே கூடத் தமிழர் தன்னுரிமைகளை அவற்றில் வற்புறுத்தச் செய்தல் வேண்டும். அக்கட்சிகள் அவ்வப் பெய ருடனே தமிழக இனக் கட்சியின் துணைக் கட்சிகளாகிவிடும்.

தமிழகம் மறுமலர்ச்சி கண்டுவிட்டது தமிழனே! உன் பிள்ளைகள் வளரும் பிள்ளைகள்; பருவப் பிள்ளைகள். அவர்கள் நல்வாழ்வு என்றும் மணம் காண, இனஉரிமை பெற, நீ செய்ய வேண்டிய சிறு செயல், உன் உரிமையை அவர்களுக்கு, உன் இனத் தோன்றல்களின் வளத்துக்கு, உன் இன உரிமைக்குப் பயன் படுத்துவதே.

எழு, விழித்தெழு, வீறிட்டெழு. அவாவுடன் ஆர்வத்துடன் கிளர்ந்து செயலாற்றி வெற்றிக் கோட்டையில் உன் வீரப் புகழ்க்கொடி நாட்டு.

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்ப் பண்!

வீறுக தமிழர் வாழ்வு!