பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

85

ஆய் இளவரசியின் தோற்றத்திலும் ஆடையணி யமை தியிலும் ஒரு திட்ப நுட்பம், பெருமித வீறு - சிறிது கடுமை வாய்ந்த வீறமைதியே காணப்பட்டது. முந்திய இரவில் நண்பர்கள் பேச்சில் எந்த மனிதனும் எளிதில் புண்படுத்திவிடத் துணியாத அளவில் ஒரு மனத் திட்பமும் பற்றுறுதியும் வாய்ந்த மனைவி பற்றிய செய்தி அடிபட்டிருந்தது. மற்ற எந்தப் பெண்டிரையும் விட, அந்த வகைக்கு ஒப்பற்ற முன் மாதிரியாகவே இளவரசி விளங்கினாள் என்று கெஞ்சி எண்ணாமலிருக்க முடியவில்லை. ஆனால் அந்த எண்ணமும் சரி, அவளது மாசு மறுவற்ற முழுநிறை அழகும் சரி அவன் உள்ளத்தில் தாங்கொணாப் பளுவுடன் அழுத்தினவேயன்றி வேறல்ல. அவளை அணுகி நட்பாடுவதும் முடியாது என்று நிலையை அவையே உண்டுபண்ணின.

இளவரசன் கெஞ்சி இப்போது வேறு பக்கம் தன் கவனம் திருப்பினான். சுனாகன் பெருமாட்டியிடமும் இளவரசியின் மற்றப் பொது நிலைப் பணிப் பெண்டிரிடமும் அவன் கலந்து நகையாடி மகிழ்ந்தான். இப்போது நண்பகல் கடுவெப்பேறி வந்தது. அதனால் சிவந்த இளவரசனுடைய கன்னங்கள் அவனது அழகுக்கு அழகு செய்தன என்றே அப்பெண்டிர் கருதினர்.

ஆய் இளவரசியின் தந்தை இச்சமயம் வந்து திரைக்கு அப்பால் நின்றுகொண்டே மருமகனுடன் அன்புரையாடினார் வேளையின் வெப்பு எவர் வருகை தருவதற்கும் இசைவற்றது என்று கருதிய இளவரசன் இவ்வுரையாடலை விரும்பாது முகஞ்சுளித்தான். இது கண்டு பாங்கியர் அவனைக் கேலி செய்து அடங்கிய முறையில் நகையாடினர். கெஞ்சி அவர்களை அமைதிப்படுத்தும் முறையில் கடுமையுடன் நோக்கியவாறு பஞ்சணையில் சாய்ந்து விழுந்தான். அவன் நடத்தை இந்த மாடத்தில் ஏனோ நன்கு அமையவில்லை.

இச்சமயம் இரவின் நிழல் படரத் தொடங்கிற்று ஆனால், சனி உச்ச நிலையிலிருந்த தென்றும், அதனால் கெஞ்சி ளவரசன் அரண்மனைக்கு இச்சமயம் செல்வது சரியல்ல வென்றும் எவரோ கூறினார்கள். மற்றொருத்தி, 'ஆம், நீ கூறுவது முற்றிலும் சரி. அது இப்போது பெருந் தடைதான்’ என்றாள். இதுகேட்டு இளவரசன் பொருமினான். ‘அந்தோ,