பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

--

அப்பாத்துரையம் - 22

என்ன பரிதாபம்! என் மாளிகையும் அதே திசையிலல்லவா இருக்கிறது? இப்போது நான் எங்கே போவேன்?' என்று முணு முணுத்தான். ஆனால் முணு முணுத்தவாறே அவன் சாய்ந்து துயிலில் ஆழ்ந்தான்.

அவன் கவலை இப்போது பாங்கியரிடையே ஆழ்ந்த சிந்தனைக் குரியதாயிற்று அவர்கள் செய்வகை யாது என்று ஆராயத் தொடங்கினர். ‘ஏன்? கீ நோ கமியின் மனையில்லையா?' என்றாள் ஒருத்தி. இந்தக் கீ நோகமி கெஞ்சியின் பாங்கருள் ஒருவன். அவன் மனை ஆற்று நடுவே அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அணிமையில் ஆற்றில் அணைபோட்டு, அதை அவன் மனைப்புறத் தோட்டத்தின் வழியே ஓடும்படி செய்திருந்தார்கள். இதனால் அம் மனையகம் இன்பகரமான நிழலும் குளிர்ச்சியும் உடையதாயிருந்தது.

கெஞ்சி இச் சமயம் பார்த்து விழித்துக் கொண்டான். 'ஆகா, இது மிக நன்று, நன்று. மேலும் நாம் முன் வாசலில் திடுமென நுழைய விரும்பினாலும், அதைப் பொருட்படுத்தாத மக்கள் வாழும் மனை அது' என்றான்.

தகாத திசைகள் என்று குறிப்பிடப் பட்டவற்றை நீக்கி மற்றத் திசைகளிலும் கெஞ்சிக்கு எத்தனையோ நண்பர் மனைகள் இருந்தன. ஆயினும் அவற்றில் ஒன்றிலும் அவன் இரவைப் போக்க விரும்பவில்லை.ஏனென்றால் இவ்வளவு நீண்ட காலம் வராதிருந்த பின், இப்போது தன்னைவிட நல்ல பொழுது போக்குத் துணை கருதியே வான கோளங்களின் சாக்கில் அவன் வேறிடம் செல்வதாக இளவரசி ஆய் நினைத்துக் கொள்ளக் கூடும். இதை அவன் விளக்க எண்ணினான்.

கீ நோ கமியிடம் கெஞ்சி இதைத் தெரிவித்த போது அவன் இதற்கு அட்டியில்லாமல் இணங்கினான். ஆயினும் மற்றத் தோழர்களிடம் அவன் முணு முணுத்தான். அவன் தந்தை இயோ நோ கமி தன் அலுவல் காரணமாக வெளியிடம் சென்றிருந்தான். தன் இள மனைவியைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அவன் மைந்தனிடம் கூறியிருந்தான். 'இக் காரணத்தால் நான் விரும்பும் அளவு இளவரசனுக்கு வேண்டிய இடவசதி செய்ய முடியாதே என்று வருந்துகிறேன்' என்றான் அவன்.