பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 22

என்று மெல்லக் கேட்டான். ஆனால், நீ நோ கமி அந்தக் குறிப்பை உணர்ந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அத்துடன் கெஞ்சி செயலற்று மெல்லச் சாய்ந்து கண்ண யரலானான். அவன் ஏவலர்கள் வாயாடாமல் அடங்கி அமர்ந் திருந்தனர்.

அறையிலிருந்தவர்களிடையே கீ நோ கமியின் மைந்தராகிய சிறுவர் இருந்தனர். அரண்மனைப் பணிப் பையன்களென்ற முறையில் அவர்களில் சிலரைக் கெஞ்சி ஏற்கனவே அறிந்திருந்தான். அவர்களுடன் இயோ நோகமியின் பல புதல்வர்களும் இருந்தார்கள். மற்றும் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதுடைய ஒரு சிறுவன் தோற்றம் கெஞ்சிக்குக் கவர்ச்சி யூட்டிற்று. அவனைப் பற்றி அறியும் அவாவில் அவன் சிறுவர்களைப் பொதுவாகக் கீ நோ கமிக்குக் காட்டி, 'இவர்கள் யார் யார் பிள்ளைகள்!' என்று கேட்டான்.

ஒவ்வொருவராக விவரம் கூறிக் கொண்டு வந்து, கீ நோ கமி அச் சிறுவனைப் பற்றியும் விளக்கினான். ‘அவன் காலஞ் சென்ற சுனாகனின் கடைசி இளம் புதல்வன். சுனாகன் அவனிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான், ஆனால் அவன் குழந்தையா யிருக்கும் போதே உயிர் நீத்தான். அவன் தமக்கையே என் தந்தையை மணஞ்செய்து கொண்டவள். அவன் இங்கே வந்து வாழ்வதன் காரணம் இதுவே. படிப்பில் அவன் சூட்டிப்பாகவே இருப்ப தனால், அரண்மனைக்கே அவனை ஒரு நாள் அனுப்பலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆயினும் அதற்குரிய செல்வாக்குக் கிடைக்குமோ என்று மட்டும் ஐயுறுகிறோம்' என்றான்.

கெஞ்சி சிறுவன் நிலைக்கு இரங்கினான். 'பாவம், ஏழைச்சிறுவன்!' என்று கூறி மெல்லப் பேச்சை நீட்டினான். 'இப்போது இவன் தமக்கை தான் உன் மாற்றாந்தாய், அல்லவா? ஆயினும் என்ன விசித்திரம், இவ்வளவு இளம் பெண்ணுடன் உனக்கு எத்தகைய உறவு? அத்துடன் - ஆம், இப்போது எனக்கு நினைவு வருகிறது- அவளை அரசவையில் முன்னிலைப் படுத்தும் பேச்சுக்கூட இருந்தது என்று எண்ணுகிறேன். சக்கரவர்த்திகூட அவள் செய்தி என்ன என்று ஒருதடவை விசாரிக்கக் கேட்டிருக்கிறேன். உலகின் போக்கில்தான் எவ்வளவு ஏற்றத்