பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

91

தாழ்வுகள் மாறுதல்கள் ஏற்படுகின்றன, பார்!' என்று பெரிய வேதாந்தி பேசுவது போலப் பேசினான்.

கீ நோ கமி பணிவுடன் பதிலளித்தான்.

'ஆம், இளவரசே! அவள் முதலில் எதிர்பார்த்ததை விடப் பின்னால் அவளுக்குக் கிடைத்த மதிப்பு மிகவும் குறைவானதே. ஆனால், நம் மனித வாழ்வின் நிலையே அது தான். ஆம்,ஆம், மனித வாழ்வு என்றும் அப்படித்தானே இருந்து வருகிறது? மேடுகள் பள்ளங்கள் எல்லாருக்கும் உள்ளன ஆனால் ஆடவரை விடப் பெண்களே அதற்கு மிகுதி ஆளாகின்றார்கள் என்று எண்ணுகிறேன்' என்றான்.

கெஞ்சி:

-

உன் தந்தை, அவளை நன்கு போற்றிப் பாராட்டத் தானே செய்கிறார்?

கீ நோ கமி: பாராட்டவா? நன்றாகச் சொன்னீர்கள்! இந்த வீட்டின் ஆட்சியே அவள் கையில்தான். அவள் மீது அவர் காட்டும் மோகம் முழு நிறைவானது, மட்டு மீறியது. அதனைத் தாங்க மாட்டாத நாங்களனைவரும் - எல்லாரிலும் மிகுதியாக நான் தான் - அவரை இதற்காக அடிக்கடி எதிர்த்துக் கண்டிக்க வேண்டி வந்துள்ளது. ஆனால், அவர் இவற்றை ஒரு சிறிதும் காது கொடுத்து வாங்குவதே யில்லை.

கெஞ்சி: அப்படியானால், புத்தம் புதுப் பாணியில் வாழும் ஓர் அரண்மனைச் செல்வன் மனையில் அவளை அவர் எவ்வாறு விட்டுச் செல்ல முடிந்தது? அவர் பொதுவாக முன்னெச்சரிக்கை யுணர்வும் கூர் மதியும் உடையவராகத் தெரிகிறதே! - இது கிடக்கட்டும்! இப்போது அவள் எங்கே இருக்கிறாள்?

து

கீ நோ கமி: பொது அறைக்குச் சென்று விடும்படி பெண்டிருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்குரிய முன்னேற்பாடுகளை ள அவர்கள் இன்னும் முடிக்கவில்லை.

கெஞ்சியின் குழாத்தினர் அனைவரும் நன்றாகக் குடித்திருந்ததனால் தாழ்வாரங்களிலேயே அயர்ந்து உறங்கி விட்டனர். கெஞ்சி தன் அறையில் தனியனானான். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. இறுதியில் உறக்கம் வந்த பின்னும் அவன் ஒரு கணமே கண் மூடினான். அதற்குள் பின்