பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

||--

அப்பாத்துரையம் - 22

சுவரின் தாள் பலகணியின் பின்னாக யாரோ செல்வதறிந்து விழித்துக் கொண்டான். மனைத் தலைவி மறைவாய் இருக்கும் பகுதி துவே என்று அவன் எண்ணினான். உள்ளார்வம் மெல்லத் தூண்டிவிட அவன் அப்பக்கம் நகர்ந்து சென்று உற்றுக் கவனித்தான்.

'நீ எங்கே இருக்கிறாய், எங்கே தான் இருக்கிறாய்?' என்று கரகரத்த கீச்சுக் குரலில் யாரோ தொண்டைக்குள் கேட்டது போலிருந்தது. மாலையில் தான் கண்ட சிறுவன் குரலே அது என்று கெஞ்சிக்குத் தோற்றிற்று. குரலுக்கு எதிர் குரலும் மெல்லவே எழுந்தது. 'நான் இங்கே, இப்பக்கம்தான் படுத்திருக்கிறேன். புதிய ஆள் தூங்கி விட்டதா? அவர் அறை அடுத்தாற்போல்தான் இருக்க வேண்டும், ஆனாலும் அவர் எவ்வளவு தொலைவில் இருப்பதாகத் தோற்றுகிறது?' இக்குரல் சிறுவன் குரலையே மிகவும் ஒத்திருந்தது - அது அவன் தமக்கையாகவே இருக்க வேண்டுமென்று கெஞ்சி முடிவு செய்தான்.

சிறுவன் குரல் பேசிற்று.

'அவர் இந்தச் சிறகில் தான் உறங்குகிறார். இன்றிரவு தான் நான் அவரைக் கண்டேன். 'ஆ, அவரைப் பற்றி நாம் கேள்விப்பட்ட தெல்லாம் முற்றிலும் உண்மைதான். அவர் அழகின் உருவாகவே இருக்கிறார்,' என்றான் அவன்.

அரை உறக்கத்தில் அவள் பிதற்றினாள். 'இந்த இரவு சீக்கிரம் விடியாதா என்று இருக்கிறேன். ஏனெனில் நாளை காலையில் தான் அவரை நன்றாகக் காண எண்ணுகிறேன்' என்றாள் அவள்.

அவள் குரல் படுக்கை விரிப்புகளுக் குள்ளிருந்தே வருவது போலிருந்தது. தன்னைப் பற்றி அவள் மேலும் எதுவும் கேள்விகள் கேட்கவில்லையே என்று கெஞ்சி வருந்தினான். ஆனால் சி விரைவில் மீண்டும் சிறுவன் குரல் கேட்டது.

'அப்பக்கம் மூலையறையில் சென்று நான் படுக்கப் போகிறேன். இங்கே விளக்கு எவ்வளவு மங்கி மங்கி எரிகிறது?' என்றான் அவன். குரலுடன் விளக்கைத் தூண்டிவிடும் செயலும் ஒருங்கே நிகழ்வதாகத் தோன்றிற்று.