பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 22

சந்திப்புகளால் எனக்கு மீளாத் துயரமும் ஆறாக் கழிவிரக்கமும் தவிர வேறு என்ன விளையக்கூடும்? எப்படியும் ' என் உள்ளந் தரங்கத்தை கண்டு கொண்டதாக மட்டும் எவரிடமும் கூறா தேயுங்கள்' என்று அவள் ஒரு பழம் பாடலின் அடியுடன் முடித்தாள்.

‘அவள் துயரம் பெரிதுதான். அது பற்றி நான் வியப்படைய வில்லை' என்று கெஞ்சி தனக்குள்ளாகக் கூறிக்கொண்டான்.பல இனிய மெல்லுரைகளால் அவன் அவள் துயராற்ற

அரும்பாடுபட்டான்.

இப்போது சேவல் கூவிற்று. வெளியே முற்றத்தில் கெஞ்சியின் ஆட்கள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றனர். ஆயினும் ஒருவன் உறக்க மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டே, இன்னும் ஒரே ஒரு உறக்கம் உறங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும்?' என்றான். அதே சமயம் மற்றவன், 'போ, நேரமாகிறது. இளவரசர் பெருமானின் தேர் கொண்டு வா என்றான். ஆனால், இதற்குள் கீ நோ கமி அப்பக்கம் வந்தான். இப்போது ஏன் இந்த அவசரம். எப்போதும் தம்முடன் பெண்களை அழைத்துக் கொண்டு வந்து தங்கினால்தான், இளவரசர் விடியுமுன்பே எழுந்து செல்லுவார். சனிக்கோள் காலநியதி அது. இப்போது இளவரசர் நள்ளிரவிலேயே எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை' என்று ஏவலர்களை மீண்டும் அமைதிப்படுத்தினான்.

இந்த இரவின் இனிய வாய்ப்பு இனி என்றேனும் நிகழவாபோகிறது!' என்ற கவலையுடன் கெஞ்சி ஏங்கிக் கிடந்தான். ‘அவளால் கடிதமாவது எழுத முடியுமா?' இத்தகைய தடைகளை எல்லாம் எண்ணி எண்ணி அவன் உள்ளம் மெழுகாய் இளகிற்று

சூஜோ தன் தலைவியை இட்டுச் செல்ல வந்தாள். அவளைப் போகவிட மனமில்லாமல் அவன் நெடுநேரம் தாக்காட்டினான். போகவிடத் துணிந்த பின்னும் அவளை மறுபடியும் தன் பக்கமிழுத்தான். பணிப் பெண் சூஜோ கேட்கும்படி குரலை உயர்த்திக் கொண்டு தன் கடைசி ஆர்வத்தைப் பேச்சாகக் கொட்டினான்: 'உனக்கு நான் எவ்வாறு செய்தி அனுப்புவேன்? அந்தோ, அம்மணி! என் போன்ற ஏங்கும்