பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100 ||__

அப்பாத்துரையம் - 22

காலைக் காட்சி ஈடெடுப்பற்ற எழிலுடையதாயிருந்தது.ஆயினும் வானத்துக்குத் தனிப்பட்ட தன்னுணர்ச்சி எதுவும் இல்லை. காணும் மனிதர் உணர்ச்சியாகவே அது காட்சியளிக்க முடியும். கெஞ்சி இந்தக்காட்சிக்கு அன்று முற்றிலும் அன்னியனாகவே இருந்தான். ஏனெனில் கண்முன் இருந்த அவ்வழகில் அவன் ஈடுபடாமல், ஆவலுடன் அவன் அடிக்கடி எதிர் திசையில் திரும்பிப் பார்த்தபடியே சென்றான். 'அவளுக்கு ஏதேனும் செய்தி அறிவிக்க முடியுமா? இல்லை, அது ஒரு போதும் முடியாது'. இவ்வெண்ணம் அவன் உள்ளத்தில் துயர் நிரப்பிற்று. துயரார்ந்த அவ்வுள்ளத்துடன் அவன் தன் மனைவியின் இல்லம் சென்றான்.

சிறிது உறங்கி உள்ளத்துக்கு ஓய்வு தரவே அவன் விரும்பினான். ஆனால் அவ்வுள்ளம் மீண்டும் அவளைக் காணும் வழிவகைகளையே ஆராய்ந்து கொண்டிருந்தது. அது வகையில் நம்பிக்கை யிழந்த பின்னும், அவள் இச்சமயம் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து பார்ப்பதிலேயே அது ஈடுபட்டது. அவள் பேரழகியல்ல என்றே அவன் கருதினான். ஆனால், அழகற்றவள் என்றும் எவரும் கூறிவிட முடியாது. 'ஆம்! உமா நோ கமி முழு விரிவாக விளக்கிய நடுத்தர வகுப்புக்கு எல்லாவகையிலும் பொருத்தமான எடுத்துக்காட்டே இவள்' என்று அவன் எண்ணமிட்டான்.

நெடு மாடத்திலேயே கெஞ்சி சிறிது நேரம் தங்கினான் ஆனால், எவ்வளவு முயன்றும் அவளை எண்ணாமலிருக்கவோ, அவளை நினைந்து ஏங்காமலிருக்கவோ முடியவில்லை. கடைசியில் மனக்கசப்புற்று வேறு வழியில்லாமல் கீ நோ கமியையே வரவழைத்தான் ‘அந்தச் சிறுவனை உன் வீட்டில் நான் கண்ட சுனாகன் புதல்வனை - என் சேவையிலேயே ஏன் ஈடுபடுத்தப்படாது? அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவனை நான் என் மெய்க் காவலனாக வைத்துக் கொள்கிறேன். கூடும்போது சக்கரவர்த்திக்கும் அறிமுகப்படுத்துகிறேன்' என்று அவனிடம் கூறினான். கீ நோ கமி தலைவணங்கினான். ‘உங்கள் அன்புக்கு நன்றி. தங்கள் கோரிக்கையைச் சிறுவனின் தமக்கையிடம் நான் தெரிவிக்கிறேன்' என்றான்.

இம்மறுமொழி கெஞ்சியின் மனத்தை உறுத்திற்று. ஆயினும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.