பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(104) ||__

அப்பாத்துரையம் - 22

கெஞ்சி தொடர்ந்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டே யிருந்தான். ஆனால், உத்சுசேமி சிறுவன் இளமையை எண்ணி மறுமொழி அனுப்பாமலே வாளா இருந்தாள். அவன் கவனக் குறைவால் கடிதங்கள் தவறான கைகளில் சிக்கிவிடக்கூடும். அப்படிச் சிக்கினால் எவ்விதப் பயனும் பெறாமலே அவளுடைய தூய நற்பெயர் கறைபட்டழிந்துவிடும். மேலும் இத்தொடர்பு அவளுக்கு, உள்ளூர விருப்பத்துக்குரியதாயிருந்தாலும். சமூகப்படியில் ஒருவருக்கொருவர் நெடுந்தொலைவாய்விட்ட இருவருக் கிடைப்பட்டதாதலால், என்றும் நீடித்த நல்லிணைப் புக்கு இடந் தராது. இக்காரணங்களை எண்ணி வெளிப் படையான வெற்றாசார மொழிகளின் வரம்பு கடவாமலே எழுதி வந்தாள்.

அவர்களிருவரும் ஒருங்கிருந்த நேரம் மிகக் குறுகிய தேயானாலும், அவன் தோற்றம் அவள் உள்ளத்தில் மிகத் தெளிவாகப் பதிந்திருந்தது. அதன் பேரழகை அவள் மனமார ஒத்துக்கொண்டாள். ஆயினும் தன் தோற்றத்தை ஏகதேசமாகக் கூட அவன் அறிந்திருப்பானோ என்று அவள் ஐயுற்றாள். ஆகவே இன்னும் ஒரு தடவை அவன் தன்னைச் சந்தித்தால், தன் தோற்றத்தில் அவன் உவர்ப்புக் கொண்டு விடக்கூடும் மென்றும், எல்லாத் தொடர்புமே ஓய்ந்துவிடக்கூடு மென்றும் அவள் அஞ்சினாள்.

கெஞ்சி இந்நாளெல்லாம்

டைவிடாது அவளையே

நினைத்துக் கொண்டிருந்தான். அந்த ஒரு நாள் சந்திப்பின் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் விடாது நினைவில் கொண்டுவந்து அக்காட்சிகளிலேயே மிதந்தான். ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு காட்சியும் ஒருபுறம் அவன் ஆவலை வளர்த்தது, மறுபுறம் அவன் ஏக்கத்தைப் பெருக்கிற்று அவனிடம் அவள் தன்னைப் பற்றிப் பேச நேர்ந்த போது அவள் முகத்தில் படர்ந்த துயரத்தை அவன் தன் உளக் கண்முன் கண்டான். அதை எண்ணிய போதே இன்பமயமாக அவன் உள்ளம் துடிதுடித்தது. அவளை இரகசியமாகச் சந்திக்கலாமா என்று எண்ணினான். ஆனால் இது வெளிப்பட்டுவிட்டால் நேரும் இடர் மிக மிகப் பெரிது. அதன் விளைவு தன்னை அழிக்குமாயினும், அவளுக்கே இன்னும் பேராபத்தாக வந்து முடியும் என்று கண்டான்.