பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

||-

அப்பாத்துரையம் - 22

பணியாட்களிடம் கட்டளையிட்டாள். 'இது நம் விருந்தாளி இருக்கும் அறைக்குப் பக்கத்தில் உள்ள அறை. இதில் இருப்பது எனக்கு வாய்ப்பாக இல்லை. என் உடம்பு மிகவும் திமிர்த்துக் கொண்டிருக்கிறது. அதைப் பிடித்து விட்டுக் கொள்ள வேண்டும். சூஜோ அறை அகற்கேற்ற வாய்ப்புகள் உடையது. அங்கே என் உடைமைகளை யெல்லாம் கொண்டு செல்லுங்கள்' என்றாள். இதன் பயனாக அச்சிறையின் எதிர்புறமுள்ள அறைக்கே அவள் படுக்கையும் தட்டு முட்டுப் பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன.

கெஞ்சி முன் கருத்துடனேயே திட்டமிட்டுத் தன் ஏவலாளர்கள் அனைவரையும் விரைவில் தத்தம் படுக்கைக்கு அனுப்பி விட்டான். எல்லாம் அமைதியானவுடன் அவளுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினான். ஆனால் சிறுவன், அவள் அறையில் அவளைக் காணவில்லை. வீட்டின் மூலைமுடுக்குகள் தோறும் தேடிக் கடைசியில் எதிர் சிறையிலுள்ள சூஜோ அறையிலே அவளைக் கண்டு பிடித்தான். தன்னை இவ்வாறு அலைய வைத்ததற்காகப் பாதி கோபத்துடனும் பாதி அழுகையுடனும் அவன் தன் தமக்கையைக் கடிந்து கொண்டான். 'நீ ஏன் இப்படிக் கண்ணாமூச்சியாடிச் சாகசம் பண்ணித் திரிகிறாய்? அவர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்றான். அவளுக்கு இப்போது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 'என்னை இப்படித் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டு வர வேண்டிய அவசியம் உனக்கு என்ன வந்தது? தவிர, இத்தகைய செய்திகளைச் சின்னஞ்சிறு குழந்தையாகிய உன் மூலம் அனுப்புகிறாரே, அது எவ்வளவு தவறு? போ, அவரிடம் போய்ச் சொல்லு, எனக்கு உடம்புக்கு நலமில்லை. என்தோழியர் என்னுடன் இருக்கிறார்கள். நான் அவர்களைக் கொண்டு என் உடல் பிடித்து விட்டுக் கொள்ளப் போகிறேன்', என்று கூறி அவனை அனுப்பினாள்.

தான் தன்னுரிமையுடன் வாழ்ந்த காலத்தில், தன் தந்தை உயிருடனிருந்த போது, இத்தகைய அருநிகழ்ச்சி எவ்வளவு மகிழ்ச்சியூட்டி யிருக்கும் என்று இச்சமயத்திலும் அவளால் எண்ணாதிருக்க முடியவில்லை. ஆனால், இப்போதோ தன்னையே தனக்குத் துணையாக விட்டு விட்டுத் தந்தை மறைந்துவிட்டார். இப்போது இளவரசர் தயவைக் கண்டு ஐயுறவும், அச்சமும், எச்சரிக்கையும் கொள்ள வேண்டியதா