பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

||--

அப்பாத்துரையம் - 22

விளக்கருகே நடுத்தூண் மீது சார்ந்து கொண்டு அமர்ந்திருந்த அணங்கே தன் உளங் கொண்ட மாதரசி என்று அவன் கண்டான். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவள் கோடற்ற கருஞ் சிவப்பாடை அணிந்திருந்தாள். தோளில் ஒருவகைச் சவுக்கம் கிடந்தது. அவள் தலையின் சாய்ந்த நிலை கவர்ச்சிகரமாய் இருந்தது. ஆனால் அவள் உருவம் மிக மிகக் குறுகியதாயிருந்ததனால் அவள் பெண்மையும் மட்டுப்படுவது போலத் தோற்றிற்று. தன் தோழியிடமிருந்து கூட அவள் தன் முகத்தை மறைக்கவே முயன்றதாகக் காணப்பட்டது அவ்வப்போது ஒரு கணத்துக்குமேல் அவள்கூட அதை முழுமையாகக் கண்டிருக்க முடியாது.

கெஞ்சிக்கு நேர் எதிராகவே தோழி இருந்ததால் அவளை அவன் மிகத் தெளிவாகக் காண முடிந்தது. அவள் உள்ளாடை மிக மெல்லிய வலை போன்ற வெண்துணியால் ஆனது, சிவப்பு நீல மலர்களால் பூவேலை புனையப்பட்ட புற ஆடை ஒன்று அதனைப் பாதி பொதிந்தும், பாதி பொதியாமலும் தொட்டுத் தொடாமல் கிடந்தது. முன்னே உடை இணைத்துக் கட்டப்படாமல் திறந்தே கிடந்ததனால், அவள் கழுத்தும் மார்பகங்களும் மறைவின்றி நன்றாகப் புலப்பட்டன. அரைச் சட்டையைத் தோளுடன் இழுத்துக் கட்டிய மெல்லிய சிவப்புக் கச்சை கூட அவற்றிடையே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. மொத்தத்தில் அத்தோற்றம் தங்கு தடையற்ற அவள் நடையைச் சுட்டிக் காட்டிற்று.

தசைப்

அவள் நெட்டையாகவும் கட்டமைப்பு உடையவளாகவும் இருந்தாள். மேனி அப்பழுக்கற்ற வெண்மையும் மென்மையும் உடையதாயிருந்தது. உறுப்புகள் உறுதியான பற்றுடையவையாய் உருண்டு திரண்டு காட்சியளித்தன. தலையின் சாய்வும் புருவங்களின் கோணங்களும் குற்றமற்றவை யாயிருந்தன. இதழின் வண்ணமும் கண்களின் பார்வையும் காண்பவர்க்கு இன்பமளித்தன. தலைமுடி அடர்த்தியாகவே இருந்தது. ஆனால் தோள்மட்டத்தில் நேர்த்தியாகக் குறுகக் கத்தரித்துவிடப்பட்டிருந்தது. அதன் இழைகள் பட்டிழைகள் போல மென்மையும், அழுத்தமும். பளபளப்பும் உடையவையாய் இருந்தன.