பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

113

இத்தகைய அழகு பிம்பத்தை மகளாகப் பெற்றிருப்பது இயோ நோ சுகேக்கு எத்தனை பெருமைக்குரிய செய்தி! அவன் து பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வதில் வியப்பில்லை. அவளிடம் மட்டும் படபடப்புசற்றுக் குறைவாயிருந்தால், அவள் முழு நிறைவுடையவள் என்றே கூறலாம் - இவ்வாறு கெஞ்சி நினைத்தான்.

ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அவள் வேண்டாத கட்டைகளை எல்லாம் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் உணர்ச்சித் துடிப்புடையவள். இச்சிறு செயலிலும் தேவைக்கு மேற்பட்ட படபடப்பே காட்டினாள். அச்சமயம் அவள் தோழி மெல்லக் குரல் கொடுத்தாள். ‘சற்றுப்பொறு. இப்போது ஓர் எக்கச்சக்கமான கட்டம். என் முயற்சி இப்போது இதோ இந்த ஓர் எதிர் கட்டை தான்' என்றாள். முதலணங்கு இதற்குள் பொறுமையிழந்தாள். ‘ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டது. நான் தோற்று விட்டேன் இப்போது காய்களை எண்ணுவோம்' என்று அவள் எண்ணத் தொடங்கினாள். விரல்கள் பத்து இருபது முப்பது நாற்பது என்று கூட்டின.

இயோவின் மனைவியின் சலவை வேலை அரங்கத்தைப் பார்க்க, ‘எட்டுத் தொட்டி இடப்புறம், எதிரே ஒன்பது வலப்புறம்’ என்ற பழம் பாடலின் முலடியை இச்சமயம் கெஞ்சியால் தனக்குள்ளாக எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இயோவின் செல்வி எதையும் முடிக்காமல்விட எண்ணவில்லை. தன் வெற்றிகளைப் போலத் தோல்விகளையும் அவள் எண்ணியே தீர்த்தாள். இது கவர்ச்சியை இன்னும் குறைத்து அவளைப் பொதுநிலைநங்கையின் திசையில் தள்ளுவதாகக் கெஞ்சிக்குத் தோற்றிற்று.'

உத்சுசேமியுடன் அவளை ஒப்பிடுவதில் கெஞ்சி புதுச்சுவை கண்டான். உத்சுசேமி மௌனமாக உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் பாதி மறைந்திருந்தது. அதன் முழு வடிவமைதியையும் அவன் காண முடியவில்லை. அவளையே நீடித்து நோக்கிய சமயம்கூட, அவன் பார்வை தன் மீது படுகிறது என்பது தெரியாமலே, தெரிந்தவள் போல அவள் தன் இருப்பைச் சிறிது மாற்றினாள். ஆயினும் இது பக்கவாட்டில் அவள் முகவெட்டை