பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

115

'அப்படியானால் நாம் திரும்ப வேண்டியதுதானா? இதை என்னால் தாங்க முடியாது!' என்று கெஞ்சி அங்கலாய்த்தான். சிறுவன் தொனி மாற்றினான். 'போகவேண்டாம், இருந்து பார்ப்போம்!' என்றான். அவன் ஒரு சிறு குழந்தையேயானாலும், நிலைகளையும் மக்கள் பண்புத் திறங்களையும் கூர்ந்து கவனித்து அவற்றை நன்கு பயன்படுத்துவதைக் கெஞ்சி அனுபவமாய் அறிந்திருந்தான். ஆகவே எப்படியும் தமக்கையை வசப்படுத்தி விடுவானென்று கெஞ்சி உறுதி கொண்டான்.

நாற்கட்ட ஆட்டம் இப்போது முடிந்திருக்க வேண்டும். மெல்லாடையின் சலசலப்பும் காலடிகளின் அரவமும் எழுந்தன. மனையில் அனைவரும் தத்தம் படுக்கைக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று இவை காட்டின. ‘நம் இளமனைத் தலைவர் எங்கே? தட்டி வாயிலை நான் அடைக்கப் போகிறேன்' என்று ஒரு வேலையாளின் குரல் கேட்டது. அதனை யடுத்துக் கதவு தாழிடப்படும் ஓசையும் எழுந்தது. கெஞ்சி இப்போது சிறுவனை நோக்கினான். 'அவர்கள் எல்லோரும் உறங்கச் சென்று விட்டனர். இனித் தான் ஏதேனும் திட்டம் வகுக்க வேண்டும்' என்றான்.

தமக்கையுடன் -வாதாடுவதோ அவள் இரும்புப் பிடியை முன் கூட்டித் தளர்த்த முயல்வதோ பயனற்றதென்பது சிறுவனுக்குத் தெரியும். தற்காலச் சூழ்நிலையில் மிகச் சிறந்த திட்டம் - அவள் தனியாய் இருக்கும் சமயம் பார்த்துக் கெஞ்சியை நேரே அவளிடம் இட்டுச் செல்வதுதான். இதே கருத்துடன் கெஞ்சியும் கேள்விகள் கேட்டான், ‘கீ நோ கமியின் தங்கை

ன்னும் இங்கே தான் இருக்கிறாளா?' அவளை நான் ஒரு சிறிது பார்க்க விரும்புகிறேன்' என்றான் அவன். 'அது முடியாத காரியம். அவள் இப்போது என் தமக்கை யறையிலேயே இருக்கிறாள்' என்றான் சிறுவன். 'அப்படியா?' என்று வியப்புற்றவன் போல் நடித்தான் கெஞ்சி. ஏனென்றால் கேள்வி கேட்கும் போதே இச்செய்தியை அவன் நேரடியாகக் கண்டு தெரிந்திருந்தாலும், இவ்வாறு ஒற்றாடிக் கண்ட செய்தி சிறுவனுக்குக் கூடத் தெரியவேண்டாம் என்று அவன் எண்ணினான்.

இறுதியில் இத் தாமதங்களால் பொறுமையிழந்து, இனி வீணாக்க நேரமில்லை என்று சிறுவனை அவன் நெருங்கினான்.