பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

||_ _

அப்பாத்துரையம் - 22

நான்

சிறுவன் 'சரி' என்று தலையசைத்தான். பின் பெண்கள் பகுதியின் தலை வாயிலைத் தட்டிக் கொண்டு உள் நுழைந்தான், எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இடையறையிலே உறங்கப் போகிறேன். காற்றுக்காகக் கதவையும் திறந்து தான் வைக்கப் போகிறேன்' என்று உரக்கக் கூவிக் கொண்டே நிலத்தில் பாயை விரித்துச் சிறிது நேரம் உறங்குவதாகப் பாவித்தான். ஆயினும் மிகச் சீக்கிரத்திலேயே அவன் எழுந்து நேரொளியிலிருந்து கண்களைக் காத்துக் கொள்ள விரும்புபவன் போல ஒரு தட்டியை இடைமறித்து வைத்தான். இந்தத் தட்டியின் நிழலிலேயே கெஞ்சி பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்துவிட்டான்.

ஒருபுறம் அடுத்தபடி என்ன நடக்குமோ என்ற அச்சத் துடனும், மறுபுறம் இத்துணிகர முயற்சியினால் எதிர்பார்த்த நலன் கிட்டுமோ, என்ற ஐயமும் கெஞ்சியைப் பிடித்தாட்டின. படபடவென்று அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவன் சிறுவனைத் தொடர்ந்து நடுப் படுக்கையறையின் வாயிலிலுள்ள தட்டியை அணுகி அதைச் சற்றே விலக்கிக் கொண்டு பெரு விரலூன்றிப் பதுங்கி நடந்தான். ஆனால் மாறுவேடத்துக்காக அவன் அணிந்திருந்த தளதளப்பான ஆடைகளில்கூட அவன் தனிப்பட எவரும் கவனித்து நோக்கத்தக்க தோற்றமுடைய வனாகவே இருந்தான்.நள்ளிரவின் அமைதியிடையே இவ்வாறு அவன் உத்சுசேமியின் படுக்கையை அணுகினான்.

உத்சுசேமி கெஞ்சியின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து அஞ்சியே இருந்தாள். ஆனால் பல நாள் வராது கண்டு அவன் வர மாட்டான் என்று மகிழ்ச்சியடையத் தொடங்கிவிட்டாள். ஆயினும் புதுமை வாய்ந்த கனவு போன்ற அந்த முதற் சந்திப்பின் நினைவு மட்டும் அவள் உள்ளத்தில் ஊடாடிக் கொண்டே இருந்தது. இதனால் அன்றும் அவள் உறங்க முடியவில்லை. கிடந்து புரண்டு உருண்டு கொண்டி ருந்தாள். ஆனால் அவள் அருகே அவளுடன் நாற்கட்டமாடிய நங்கை நன்றாக உறங்கி விட்டாள். மனமார வாய்விட்டு இரகசியங்கள் பலவற்றைப் பேசியதனால், அவள் மனநிறை வுடனும், அமைதியுடனும் கிடந்தாள்.

கெஞ்சி இளவரசன் தன் உடையை மாற்றிக்கொண்டி ருந்தாலும் அவன் உடைகடந்து உடம்பிலூறிய நறுமணத்தை