பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

117

மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். உத்சுசேமிக்கு அது அவன் வரவுபற்றி முன்னெச்சரிக்கை தந்துவிட்டது, அவள் தலை உயர்த்தி நோக்கினாள். ஒற்றைத்துணி யிட்டிருந்த திரைத் தட்டியின் பின்னால் இருளிலே இருள்புடைத்துச் செல்வது போல ஏதோ அசைவது கண்டாள். இந்த இருட்டிலும் அது கெஞ்சி இளவரசன் என்பதை அவள் அறிந்துகொண்டாள். திடீர் அச்சமும் தலைசுற்றும் மனக்குழப்பமும் அவளைப் பீடித்தன. அவள் பொருக்கெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். மெல்லிய வலையாடை ஒன்றைப் போர்த்துக் கொண்டு அவ்வறையை விட்டே நழுவிச் சென்றாள்.

ஒருகணம் கழித்தே கெஞ்சி உட்புகுந்தான். 'படுக்கை இருவருக்கு விரிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே ஒருவரே இருந்தது கண்டு மகிழ்ந்தான். மேற்போர்வையை அகற்றிவிட்டு மெல்ல உறங்கும் நங்கையை அணுகினான். அவள் தான் எதிர்பார்த்த உருவினும் வாட்டசாட்டமானவள். ஆனால் இது அவன் போக்கை மாற்றவில்லை. அவள் ஆழ்ந்த உறக்கம் அடுத்தபடி அவன் வியப்பைத் தூண்டிற்று. அடுத்த கணம் அது உத்சுசேமியல்ல என்று கண்டான். 'என்ன தவறுசெய்து விட்டோம்' என்ற அச்சம் மேலிட்டது.' 'என் செய்வது, வந்து விட்டோம். இனித் தவறான அறைக்கு வந்துவிட்டோம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் இங்கே எந்த அறையும் தவறானதே. இனி உண்மை அணங்கைச் சென்று தேடுவதும் பலனற்ற செயல். ஏனெனில் உத்சுசேமி தன்னை ஒரு தூசளவாகவேனும் மதித்திருந்தால்கூட இப்படி விட்டுச் சென்றிருக்கமாட்டாள். அத்துடன் ஒருவேளை, அது விளக்கொளியில் தான் உற்றுப் பார்த்த பெண்மணியாகவும் இருக்கலாம். அப்படியானால், மாற்றம் அவ்வளவு மோச மானதும் அல்ல!' - இவ்வாறு அவன் தனக்குள்ளாகப் பேசினான். ஆனால் இப்பேச்சின் போக்குக் கண்டு அவன் உள்மனம் கடிந்து கொண்டது - 'ஏன் இத்தனை சபலம் - அதுவும் உனக்கா!' என்றது.

அணங்கு கண்களைத் திறந்தாள். இயல்பாக எதிர் பார்க்கத்தக்க படியே அவள் திடுக்கிட்டாள். ஆனால் இந்த உணர்ச்சி நீடிக்கவில்லை. அவள் அச்சம் எளிதில் அகன்றது. அவள் ஆழ்ந்த சிந்தனையற்றவள். பெண்மையின் அனுபவ