பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

அப்பாத்துரையம் - 22

என்ன சனியன் இது!' என்று சிறுவன் உள்ளுக்குள் முணுமுணுத்தான். ஆனால் விளக்கங் கூற விரைந்தான். தெல்லாம் ஒன்றுமில்லை.' ஒரு நொடி சற்று வெளியே போய்வர எண்ணினேன்' என்றான்.

இச்சமயம்

கஞ்சி வாசல் கடந்து வந்து கொண்டிருந்தான். அச்சமயம் பார்த்து விடியற் கால மேகங்கள் விலகி நிலவின் ஒளி அவன் மீது விழுந்தது. கதவருகே வயது வந்த ஒரு நெடிய ஆடவனைக் கண்டு அவள் அலறினாள். 'இது யார் உன்னுடன் இருப்பது?' இக்கேள்வியால் எதுவும் நேரு முன் நல்ல காலமாக அவள் தானே தன் கேள்விக்குப் பதிலாக ஒரு விளக்கமும் கூறிவிட்டாள். 'ஓகோ, மிம்புவா அது!' இப்படிப் பனைமரத்திலே பாதியாய் வளர்ந்து விட்டதுபார்!' என்றாள். மிம்பு கம்பிபோல் ஒடுங்கி நெட்டையான ஒரு பணிநங்கை. அவ்வளர்ச்சி காரணமாக மனையில் எல்லாராலும் கேலி செய்யப்பட்டு வந்தவள். அவளுடனேயே சிறுவன் வெளியே செல்வதாகக் கிழவி நினைத்ததனால், அவள் கேலி சற்று நீண்டது. 'தம்பி, நீயும் மோசமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் அவள் உயரத்துக்கு உன் உயரம் சரியாய்ப் போய்விடும்' என்றாள். இந்தப் பேச்சுடன் அவர்கள் வெளிவந்த கதவுவழியே அவள் உள்ளே சென்றாள்.

கிழவி தன்னை இன்னொருவராகக் கருதிய போதிலும் கெஞ்சியின் இக்கட்டு இத்துடன் தீரவில்லை. இடைவழியின் நிழலிலே கூடிய மட்டும் பதுங்கிப் பதுங்கியே நடந்தான். கிழவி அவனருகே வந்து, கண்ணே, இப்போது உன் காவல் முறைதானே!' என்றாள். கிழவி நினைத்த மிம்புவாகக் கெஞ்சி பதில் கூற முடியாமல் திண்டாடினான். ஆனால் தானே தனக்கு மறுமொழி கூறிவிடும் கிழவியின் பழக்கம் இப்போதும் அவனைக் காத்தது. 'நேற்றெல்லாம் நான் பொல்லாத சூலையால் முடங்கிக் கிடந்தேன். ஆனால் வேலைக்கு ஆட்கள் போதவில்லை. முற்றிலும் முடியாமலிருந்தாலும் உளைந்து உழைத்து விட்டேன். இப்போது என் நோவு தாங்க முடியவில்லை. பேசக்கூட முடியவில்லை. இதோ- ஐயோ, ஐயோ வேதனையாயிருக்கிறது. நான் போகிறேன்' என்ற அவள் அவர்களைக் கடந்து உருண்டு புரண்டு ஓடினாள்.