பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

|--

அப்பாத்துரையம் - 22

தென்பட்டது. படுக்கை, மேசை முதலிய ஏதேனும் ஒன்றைக் கொண்டுவந்து இட்டு, அவற்றின் மீதேறியே அவர்கள் பார்க்க முயன்றிருக்க வேண்டும். இது அவனுக்குப் புதுமையாகத் தோற்றிற்று.

முன்பாக ஓடிவரும் அரண்மனை முன்னோடிகள் கூட இல்லாமல், ஒரு சாதாரண வண்டியிலேயே அவன் வந்திருந்தான். இந்நிலையில் அவன் யார் என்று எவரும் ஊகிப்பது முடியாது. அந்தக் கவலையில்லாமல் அவ்வீட்டை நுட்பமாக அமைதி யுடன் கவனித்தான். வாயிலும் பின்னல் சட்டங்களாலேயே ஆக்கப்பட்டிருந்தது. அது திறந்திருந்ததனால் அவன் உட்புறத்தை நன்கு பரிசீலனை செய்ய முடிந்தது. மிகவும் எளிய நிலையில் உள்ள வீடு அது, வாய்ப்பு வசதிகளும் அந்த அளவிலேயே இருந்தன. முதலில் அத்தகைய வீட்டில் இருப்பவர்மீது அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. கீழ்வரும் பாடல்கள் அவனுக்கு இச்சமயம் நினைவுக்கு வந்தன.

'அகல் உலகில் உரிய உறைவிடம் எதுவும் தேடற்க!’

பகல் கழியின் அயலிடம் உன் தங்கிடமாக் கொள்க! மன்னர் மணிபவள மாளிகையில் வாழட்டும்,

துன்னும் தழைக்குடிலே போதும் இன்பத் துணைவர்க்கே!’

பின்னிய வேலிமீது கொடி ஒன்று படர்ந்து தன் பசுமையான குளிர்ச்சி தங்கிய தழைகளை எங்கும் பரப்பிற்று. அவற்றிடையே தமக்குள் தாமே பேசிக்கொள்பவரின் முத்த இதழ்கள் போலப் பாதி திறந்த இதழ்களையுடைய வெண்மலர்கள் கூடிச் சிரித்தன. அவற்றின் பெயர் 'யுகாவ், (மாலை முகங்கள்) என்பது. அப்பெயர்களிட்டுப் பணியாள் ஒருவன் அவற்றைக் கெஞ்சிக்கு அறிமுகப்படுத்தினான். அந்தப் பாழ்ங்குடிலில் இவ்வளவு அழகாய்க் கொத்துக்கொத்தாக அம்மலர்கள் பூத்துக் குலுங்க உளங்கொண்டது அவனுக்குப் புதுமையாகவே இருந்தது. இற்று முறிந்த இறைவாரங்களிலும், கை வாரங்களிலும் வாய்த்த வாய்த்த இடங்களிலெல்லாம் சென்று சென்று அக்கொடி தன் வண்ணப் பூவளங்கொழித்தது.

கெஞ்சி அம்மலர்களில் சில பறித்து வரும்படி வேலையாள் ஒருவனை அனுப்பினான். அவன் பறித்துக்