பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

129

துறவு வாழ்க்கை மேற்கொண்ட அம்முதிய மாது ஒரு மனிதனின் வாழ்க்கைப் போக்கில் இவ்வளவு உயிர் ஆர்வம் காட்டியது தகாது என்று அவள் மைந்தர்கள் எண்ணினார்கள். கெஞ்சிகூட இதனால் அதிர்ச்சியடையக் கூடுமென்று எண்ணி அவர்கள் ஒருவரை ஒருவர் ஐயுற வச்சத்துடன் நோக்கினர். ஆனா

னால் கெஞ்சி அதன் பாசத்தில் தோய்ந்து மகிழ்வுற்றே நின்றான். அவன் சொற்களும் அதே உணர்ச்சியைத்தான் காட்டின.

'நான் குழந்தையாய் இருந்தபோதே எனக்கு உரியவர்களும் அரியவர்களும் என்னை விட்டகன்றார்கள். என் வளர்ப்பில் பலர் கருத்துச் செலுத்தினாலும், உற்ற தாயாக எல்லாரிலும் எனக்கு அருமையானவர்கள் நீங்கள்தான். உங்களிடம் தான் நான் முழுத் தாய்ப் பாசமும் கொண்டுள்ளேன். நான் வளர்ந்தபின் முன்போல் அடிக்கடி உங்களுடன் நான் வந்திருக்க முடியவில்லை. இங்கே வந்து நான் விரும்பிய அளவில் அடிக்கடி உங்களுடன் பழகவும் இயலாமல் போயிற்று. ஆயினும் நான் இதற்கு முன் இங்கு வந்து போனது முதல் இது நாள் வரையும் எவ்வளவோ நீண்ட நாட்களானாலும், உங்களைப் பற்றிக் கருதாத நாளில்லை- வாழ்க்கையின் போக்கு இவ்வளவு கடும் பிரிவுகளுக்குக் காரணமாய் விட்டதே என்று வருந்தாத நேரமுமில்லை' என்றான்.

கையை

அவன் பேச்சிலும் முகத்திலும் கனிவு துலங்கிற்று. தன் கண்ணில் கசிந்த ஈரத்தைத் துடைக்க அவன் உயர்த்தியபோது, அதன் உறைநுனிகளில் செறிந்திருந்த அரசுரிமை சான்ற நறுமணம் அச்சிற்றறை முழுவதும் பரவிற்று. இத்தகைய இளவரசனுக்குச் செவிலித்தாய் என்ற முறையில் முதியவள் கொண்ட தற்பெருமை கண்டு சிறிது அருவருப்புற்ற அவள் மைந்தர்கள் கண்கள் கூட இப்போது கலங்கின.

நோயுற்ற மாதின் பெயரால் இடைவிடாப்பூசனைகள் நிகழ ஏற்பாடுகள் செய்தபின், கோரெமிட்சுவின் உதவியால் கெஞ்சி ஒரு விளக்கைத் தருவித்து வண்டியில் ஏற்றி, அவ்விடம் விட்டுப் புறப்பட்டான். வீட்டுக்கு வெளியே வந்ததும் அவன் வெண்மலர்கள் வைக்கப்பெற்றிருந்த விசிறியை நோக்கினான். அதிலே முயற்சியில்லாதது போலத் தோற்றும்படி மிக