பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

||-

அப்பாத்துரையம் - 22

நேர்த்தியான எழுத்துகளில் ஒரு பாடல் தீட்டப்பட்டிருந்ததை அவன் கவனித்தான். 'உங்கள் கருத்தைக் கலங்க வைத்த மலர்கள் ஒளிமிக்க பனித்துளியாடையால் புதுமைத் தோற்றம் படைத்த யுகாவ் மலர்களேயாகும்' என்று குறித்தது அப்பாடல். அதன் முயற்சியில்லா எளிமை, எழுதியவர் அடையாளமும் மதிப்பும் மறைப்பதற்கென்று வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாகத் தோற்றிற்று. ஆயினும் அம் மறைப்புக் கடந்து கையெழுத்து அவ்வுயர்வையும உயர் குடியின் பயிர்ப்புச் சிறப்பையும் காட்டிற்று. இவைகண்டு கெஞ்சி ஒருபுறம் வியப்பும் மற்றொரு புறம் அதனூடாக மகிழ்வும் கொண்டான்.

சி

'இடது புறமுள்ள இந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள்?' என்று அவன் கோரெமிட்சுவிடம் கேட்டான். இடையீட் ாளனாக இருக்க விரும்பாமல் கோரெமிட்சு கை விரித்தான். 'என் தாய் இல்லத்தில் நான் ஐந்தாறு நாட்களாகத் தான் தங்கியிருக்கிறேன். அந்த நாட்களிலும் தாயின் நோய் பற்றியே முற்றிலும் சிந்தனை செலுத்தி வர வேண்டிய நிலையில் அயலாரைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை' என்றான். கெஞ்சி இப்போது தன் ஆவலுக்கு விளக்கம் கூறினான். 'பொல்லாங்குக்கு இடமற்ற, ஆனால் முக்கியமான ஒரு செய்தி குறித்தே இதை அறிய விரும்புகிறேன். இந்த விசிறி எத்தனையோ பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. அவற்றை நான் விடுவித்துணர்வது மிகமிக அவசியம். ஆகவே தயவு செய்து, அருகில் இவ்வட்டாரத்தை நன்கறிந்தவர்களிடம் விசாரித்துத் தெரிவியுங்கள்' என்றான்.

கோரெமிட்சு உடனே அடுத்த வீட்டின் வேலையாளை அழைத்துக் கேட்டான். 'இந்த மனை செயலிழந்து விட்ட ஒரு நிலவாரக் கிழவருடையது. அவர் நாட்டுப்புறம் சென்று வாழ்கிறார், ஆனால் இச்சீமாட்டி இங்கேயே தங்கியுள்ளாள். அவள் இளமை நலமும் சமுதாய வாழ்க்கை யார்வமும் உடையவள். அவள் உடன் பிறந்தார் அரண்மனை இளைஞர் ஆதலால் அடிக்கடி இங்கே வந்து போவதுண்டு. ஒரு வேலையாளுக்குத் தெரிந்த அளவில், இம்மனை பற்றிய செய்திகள் இவையே' என்றான் அவன்.

கோரெமிட்சு இவற்றைக் கெஞ்சியிடம் தெரிவித்தான்.