பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(140) ||--

அப்பாத்துரையம் - 22

அந்த மனை வரிசைகள் கடந்து சில சமயம் ஒரு வண்டியின் ஓசை கேட்கிறது. பணிப்பெண்கள் அனைவரும் சென்று பாதையைக் கூர்ந்து நோக்குகிறார்கள். அச்சமயம் ஏற்படும் குளறுபடிகளில் சில பல தடவைகள் வீட்டுத் தலைவி என்று கருதத்தக்க ஓர் அணங்கும் அவர்களுடனே நழுவிச் செல்வது கண்டேன். அவளை நான் நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் நல்ல அழகியாகவே தோற்றினாள்.

'ஒருநாள் ஒரு வண்டி தொலைவில் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னோடிக் காவலர்கள் மனையை நோக்கியே வருவதாகத்தோற்றிற்று. பணிப் பெண்களுள் ஒருத்தி வெளியே ஓடிக்கொண்டே, 'உகான், உகான் வா, விரைவில் வந்து பார். நம் படைநாயகத்தின் வண்டி இவ்வழி வருகிறது” என்று கூவினாள். அது கேட்டு இளமை கடந்த, ஆனால் இனிமை வாய்ந்த முகத்தையுடைய ஒரு மாது விரைந்து வெளியே வந்தாள். "பொறு, பொறு!"அது படைநாயகம்தான் என்று எப்படித் தெரியும்? நான் சென்று பார்க்கட்டும்”என்று கூறிக்கொண்டு அவளும் வெளியே வந்தாள்.

'தோட்டத்திலிருந்து சந்துக்குச் செல்லும் வழியில் ஒரு வகை இடைப்பாலம் இருந்தது. பரபரப்புடன் ஓடிய மாதின் ஆடைநுனி காலில் சிக்கி அவள் தலைகுப்புற விழுந்து, கீழேயிருந்த சிறு கால்வாயின் பள்ளத்திலே உருண்டாள். "ஐயையோ!”பாவத் தெய்வம் கத்சுராகியின் கைவரிசையைப் பார்!' என்று அவள் முணுமுணுத்தாள். ஆனால் அவள் ஆர்வத்தை இந்த வீழ்ச்சி ஒரு சிறிதும் கெடுக்கவில்லை. விழுந்தபடியே எழுந்திருந்து அவள் வண்டியைத் தொலை விலிருந்தே கூர்ந்து நோக்கலானான்.

'வந்தவர் எளிய அகலமான மேலாடை போர்த்திருந்தார். அவருடன் ஏவலர் இருந்தனர். அவர்கள் கூப்பிடு தொலை அணுகியதும் உணர்ச்சி வேகத்துடன் பணிப்பெண்டிர் அந்த ஏவலர்களில் பலரைத் தனித்தனிப் பெயர் கூறி அழைத்தனர். இதில் புதுமை என்னவென்றால், அந்த ஏவலரின் பெயர்கள் பெரிதும் தோ நோ சூஜோவின் பணிமக்கள், வலவர் பெயர்களாகவேயிருந்தன.