பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

||--

அப்பாத்துரையம் - 22

தாறுமாறாகக் கிழிந்த வேட்டுவ ஆடையில் முகத்தை மறைத்துக் கொண்டு, எவரும் எழுந்திருப்பதற்கு முன்னே இப்படி அரையிருட்டில் அவன் செல்வதை எண்ணி அவள் பெருமூச்சு விட்டாள். பழங்கதைகளில் வரும் பூத பிசாசக் காதலர் போலவே அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இது அவளுக்கு ஓரளவு அச்சமும் தந்தது. அதே சமயம் அவன் சின்னஞ்சிறு அங்க அசைவுகள்கூட அவன் பொது நிலைக்கு மேம்பட்டவன் என்பதைக் காட்டின. கோரெமிட்சுவை இடையீடாகக் கொண்டு தன்னைக் காண வரும் ஓர் உயர் வகுப்பினனாகவே தன் காதலன் இருக்க வேண்டுமென்று அவள் ஊகிக்கத் தொடங்கினாள். ஆனால் கோரெமிட்சு தன்னுடன் வருபவரைப் பற்றித் தனக்கு எதுவும் ஒரு சிறிதுகூடத் தெரியாது என்று சாதித்தான். தன் சொந்த வகையிலும் அவன் அம்மனைக்கு அடிக்கடி சென்றுவரத் தயங்கவில்லை.

'இதன் பொருளென்ன? அவன் யார்?' - இவை தெரியாமல், புதுமை வாய்ந்த இக் காதல் அவளை மருளவைத்தது. அதே சமயம் அவள் பக்கமும் மாயமும் மருட்சியும் இல்லாமலில்லை. இன்று இந்த இடத்தில் அவள் ஒளிந்திருப்பது போலவே, என்றேனும் ஒரு நாள் திடீரென மறைந்து விடுவாளோ, அவளைத் தன்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாமலே போய் விடுமோ!' என்ற கற்பனைக் கவலை கெஞ்சியையும் பிடித்தாட்டிற்று. இந்த மனையில் அவள் தங்கல் தற்காலிகமானது என்பதை எத்தனையோ அறிகுறிகள் காட்டின. மறைய வேண்டிய நேரம் வந்தால் அவள் அவனிடம் போகுமிடம் கூறப்போவதே யில்லை. அவ்வாறு மறைந்தால், அவள் நீடித்த நிலையான அன்புக்குத் தகுதி உடையவளல்லள் என்று தெளிவுபட்டுவிடும். கிடைத்த இன்பத்தை ஆதாயமாகக் கொண்டு, அவளைப் பற்றி அதற்குமேல் எதுவும் கவலையில்லாமல் விட்டுவிட வேண்டியதே அப்போது சரியான முடிவாக இருக்கும். ஆனால் இந்த முடிவின்படி தன்னால் நடக்க முடியாது என்பதை அவன் அறிந்தான்.

கெஞ்சியின் போக்குப்பற்றி மக்கள் இப்பொழுதே பெரிதும் ஐயுறவு கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதன் பயனாக, பல இரவுகள் தொடர்ந்து அவன் அவளைச் சென்று பார்க்க