பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

145

முடியாமல் போய்விட்டது. இப்பிரிவை அவனால் ஒரு சிறிதும் பொறுக்க முடியவில்லை. அவளைத் தன் மாளிகையாகிய நிஜோயினுக்குக் கொண்டு வந்து விடலாமா என்று கூட எண்ணினான். அங்கே அவள் இருப்பது வெளிப்பட்டுவிட்டால், மிகப் பெரிய கூக்குரல் எழுப்பப்பட்டுவிடும். ஆனால் இதுபற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை, அவன் துணிந்தான்.

கடைசியில் ஒரு நாள் அவன் அவளிடம் மனம் திறந்துபேசினான். 'நம் தொடர்பை எவரும் கலைக்க முடியாதபடி ஓர் இனிய இடத்துக்கு உன்னைக் கொண்டு செல்லப் போகிறேன்.' என்றான் அவன். 'வேண்டாம், வேண்டாம். உங்கள் போக்குப் புதிராயிருக்கிறது. உங்களுடன் வர நான் அஞ்சுகிறேன்' என்று அவள் நடுங்கினாள். அவள் அச்சம் குழந்தைகளின் அச்சத்தையே நினைவூட்டிற்று. கெஞ்சி அது கண்டு குறும்புநகை நகைத்தான். 'நீயோ, நானோ நம்மிருவரில் யாராவது ஒருவர் நரிவேடமிட்டவராகத் தான் இருக்க வேண்டும். யாரது என்று காண இது ஒரு வாய்ப்பு' என்றான். அவன் பேச்சில் அன்பே தொனித்தது. ஆனால் அவள் உடனடியாகவே முற்றிலும் தன் மறுப்புடன் பணிந்து, உங்கள் விருப்பம் எதுவானாலும். அதன்படி நான் நடக்கிறேன்' என்ற போது அவன் வியப்படையாமலிருக்க முடியவில்லை.

அவன் திட்டம் அவளுக்கு இடர் நிரம்பியதாகவும் அச்சமூட்டுவதாகவுமே இருந்திருக்க முடியும். அப்படியும் பேசாது அவனைப் பின்பற்ற அவள் இணங்கியது கண்டு அவன் இதயம் உருகிற்று. இப்போது அவன் மறுபடியும் மழை நாளிரவில் தோ நோ சூஜோ வருணித்த மாய அணங்குபற்றி எண்ணினான். ஆனால் அவள் தன் முன்னைய வாழ்க்கை பற்றிய எத்தகைய கேள்வியையும் விலக்க விரும்பினாள் என்று அவன் கண்டான். ஆகவே இது வகையில் தன் ஆர்வத்தை அவன் அடக்கிக் கொண்டான்.

இப்போது அவளை அவன் உணர்ந்த அளவில், ஓடிப் போகக் கூடுமென்ற முன்னைய அச்சத்துக்கு இடமேயில்லை. தான் உண்மையாயிருக்குமளவும் அவ்வாறு செய்ய அவளுக்கு முகாந்திரம் இருக்கக்கூடுமென்று அவன் எண்ணவில்லை. தோ நோ சூஜோ மாய அணங்கை மாதக் கணக்கில் கவனியா