பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

147

சிறு செய்திக்கும் அதிர்வுற்று நடுங்கும் இயல்புடைய அம்மாது, நாற்புறமும் இங்கே ஓயாது தொல்லைப்படுத்தி வந்த இந்த இடி இடிப்பையும் கொட்டு முழக்கையும் எப்படி வாய்விடாமல் அமைதியுடன் பொறுத்துக் கொண்டாள் என்று கெஞ்சி று வியந்தான். அவள் பண்பு நலங்களை அவன் ஆர்வமாகப் பாராட்டினான். ஒவ்வொரு சந்தடியிலும் அவள் நடுங்கித் துடித்திருந்தால்கூட, அவள் மென்னயம் இவ்வளவு தெள்ளத் தெளிய வெளிப்பட்டிராது என்று அவன் நினைத்தான்.

இப்போது கழனிகளில் சூடடிக்கும் இயந்திரங்கள் இடியைப் பழிக்கும் பேராரவாரத்துடன் முழங்கின. தலையணை களுக்கு உள்ளேயிருந்து தான் வருகின்றன என்று கூறத்தக்க வகையில் அவை மிக அருகிலிருந்து வருவன போலச் செவிகளைத் துளைத்தன. தன் அகச் செவிகளே வெடித்து விடுமோ என்று கெஞ்சி கருதினான். இன்னும் பலவகை ஓசைகள் இன்ன ஓசைகள் என்று பிரித்தறிய முடியாதவையாய் இருந்தன - ஆனால் யாவுமே புதுப்புது வகையாகவும் நடுங்கவைப்பவை யாகவும் விளங்கின. எல்லாம் இடிந்து தகர்வது போல, சடசடவென முறிந்து விழுவது போலத் தோற்றிற்று. சாயம் தோய்ப்பவனின் குறுந்தடியின் மெத்தென்ற சத்தம் ஒவ்வொரு பக்கத்திலிருந்து வருவதுபோல் தென்பட்டது. இவையன்றிக் காட்டு வாத்துகளின் கீச்சுக் குரல்கள் பொறியும் புலனும் கலங்க வைத்தன.

அவர்கள் இருந்த அறை, மனையின் முன்புறத்தில் அமைந்திருந்தது. கெஞ்சி எழுந்திருந்து கதவின் மடக்குச் சட்டங்களைத் திறந்தான். இருவரும் அருகருகாக நின்று வெளியே நோக்கினார்கள். அவர்கள் முன்னிருந்த முற்றத்தில் மிக நேர்த்தியான சீன மூங்கில்கள் கொத்தாக வளர்ந்திருந்தன. அவற்றின் ஓரத்தில் தங்கிய பனிநீர்த்துளிகள் கெஞ்சி கண்டு பழகிய உயர் வட்டாரங்களிலுள்ள தோட்டங்களில் சுடர் வீசுவது போலவே சுடரிட்டன. ஊர்வனவும் அறுகால் பறவையினமும் ஒய்யென்று இரைந்தன. சுவர்க்கோழிகள் மதில்மேலிருந்து கிறீச்சிட்டன. சுவர்க்கோழிகளை அவன் இதற்குமுன் தொலைவிலிருந்து கேட்டதுண்டு. இவ்வளவு அருகே கேட்டபோது அந்த ஓசை வழக்கமாகக் கேட்பதை விடப்