பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152) ||__

||--

அப்பாத்துரையம் - 22

சென்றனர். திடுமென விரைந்து அவசர அவசரமாக எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இடம் வியக்கத்தக்க முறையில் துப்புரவாக இருந்தது. ஏனெனில் மனைக் காவலனின் புதல்வன் இதற்குமுன் கெஞ்சியின் நம்பிக்கைக்குரிய பணியாளாய் இருந்தவன். பெரு மடத்திலும் அவன் நெடுநாள் தொண்டாற்றி யவன். இப்போது அவன் அறைக்குள் வந்து கெஞ்சியின் பரிவாரத்திலுள்ள நன் மக்கள் சிலரை வரவழைக்க விரும்புவதாகத் தெரிவித்தான். கெஞ்சி தனியாய் நேரம் போக்குவதை அவன் விரும்பவில்லை. ஆனால் இப்போது தன் நோக்கத்தைக் கெஞ்சி விளக்கினான். 'நீ நினைக்கிறபடி எதுவும் செய்து விடாதே, என் அனுமதிக்குக் குந்தகம் இல்லாமல் இருக்க

வேண்டுமென்று நான் விரும்பியதனாலேயே இங்கே

வந்திருக்கிறேன். இந்த மனையை நான் பயன்படுத்தினேன் என்பதை உன்னைத் தவிர வேறு யாரும் அறிய வேண்டாம்’ என்று கூறி, அது வகையில்

ஓர் உறுதியையும்

மனைகாவலனிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

நேரடியான சாப்பாடு எதுவும் ஏற்பாடு செய்யப்பட வில்லை. ஆனால் மனைக்காவலன் சிறிது கஞ்சி உணவு கொணர்ந்தளித்தான். அதன்பின் பழக்கமில்லாத இந்தப் புதிய இடத்திலே முதன் முதலாகக் கெஞ்சியும் அணங்கும் ஒருங்கே பள்ளிகொண்டு உறங்கத் தொடங்கினர்.

அவர்கள் விழித்தெழுந்த சமயம் கதிரவன் வானில் நெடுந்தொலை ஏறியிருந்தான். கெஞ்சி தானே சென்று மடக்கு சட்டங்களைத் திறந்து நோக்கினான். தோட்டம் எத்தனையோ பாழ்பட்ட நெடுங் காடாகக் காட்சியளித்தது! இங்கே அவர்கள் மீது ஒற்றாட எவரும் வர முடியாது என்பது திண்ணம்! அவன் தன் பார்வையை இப்போது தொலைவில் செலுத்தினான். காடாய்க் கிடந்த தோட்டம் படிப்படியாகக் காட்டுடனே காடாகி எல்லையற்றுப் பரந்து கிடந்தது.வீட்டுக் கருகே பூவின் நிழல் கூடக் கிடையாது. பேணப்படாத புல்வெளியும், களைகள் வளர்ந்து பாதி மூடிக் கிடந்த ஒரு குளமுமே இருந்தன. அது பயங்கரமான தன்னந் தனிமையிடம் என்பது விளங்கிற்று. மனைக்காவலனோ அவன் ஆட்களோகூட மனைப்புறத்தில் எங்கோ தொலைவில் தான் வாழ்ந்தனர் என்று தோற்றிற்று. ஏனெனில் உயிர் வாழ்வின்