பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

155

அன்று மாலை வியக்கத்தக்க அமைதியுடையதாயிருந்தது. கெஞ்சி அந்த வானின் அழகை நோக்கியிருந்தான். அணங்கு உள்ளறையிலேயே இருந்தாள். இது இருட்டுக் குகை போல மனத்தை அழுத்திற்று. இன்னதென்று தெரியாத சோகம் அவளை ஆட்கொண்டது. கெஞ்சி முன்னறைப் பக்கமுள்ள திரையை நீக்கிவிட்டு அவள் அருகே வந்து அமர்ந்தான். இருவரும் விழுவானின் வண்ண ஒளியை ஒருவர் கண்களி னூடாக ஒருவர் பார்த்து மகிழ்ந்தனர். அவனது அழகின் வியப்பிலும், அன்பின் கனிவிலும் ஈடுபட்டு அவள் தன் அவல அச்சங்களை யெல்லாம் மறந்தாள். இப்போது அவள் அவனிடம் கூச்சம் கொள்ளவில்லை. துணிந்து பழகிக் களிப்புடன் பேசினாள். இந்தக் கபடமற்ற களிப்பு அவள் பண்புக்கு மிகவும் இசைவாயிருந்தது.

இரவு வரும் வரை அவள் அவன் அருகிலேயே அமைந்து கிடந்தாள். ஆனால் இரவு அணுக அணுக, அவள் மீண்டும் அச்சம் கொண்ட குழந்தையின் சோக முகம் கொண்டாள். ஆகவே அவன் விரைந்து இடைக்கதவை மூடிவிட்டு ஒரு பெரிய விளக்கைக் கொண்டு வந்து வைத்தான். 'வெளித் தோற்றத்தில் நீ முன் போல என்னிடம் கூச்சம் கொள்ளவில்லை. ஆனால் உன் உள்ளத்தின் ஆழத்தில் கசப்பும் அவ நம்பிக்கையும் உறைந்து கிடப்பது காண்கிறேன். இப்படி என்னிடம் நடந்து கொள்வது அன்புடைமை அன்று' என்றான். இத்துடன் மீண்டும் அவன் அவளிடம் சிறிது சிடுசிடுப்புக் காட்டினான்.

என்ன

'அரண்மனையிலுள்ள மக்கள் இப்போது நினைத்துக்கொண்டிருப்பார்களோ? தனக்கு இதற்குள் அழைப்பு தேனும் வந்திருக்குமோ? தூதர்கள் தன்னை எவ்வளவு தூரம் தேடத் துணிந்திருப்பார்கள்?' - இக்கேள்விகள் கெஞ்சியின் உள்ளத்தை அரித்தன. கவலைக்கிடம் தருபவை இச்செய்திகள் மட்டுமல்ல. ஆறாம் வளாகத்திலுள்ள பெரிய சீமாட்டி ரோக்குஜோ செய்தி என்னவோ, இப்போது அவள் என்ன கோபாவேசத்தில் இருப்பாளோ!' இத்தடவை உண்மையிலேயே பொருமுவதற்கு அவளுக்குப் போதிய காரணம் உண்டு.'

6

இவையும் இவைபோன்ற இன்னா எண்ணங்களும் மொய்த்து அலைபாயும் உள்ளத்துடன், தன்னையே முழுதும்