பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

159

அவள் துன்பத்தை நீ வேறு அதிகப்படுத்தாமலாவது இரு' என்று கூறிக் கெஞ்சி அவளை ஒரு புறம் தள்ளி விட்டுக் குனிந்து அணங்கின் நிலையைக் கூர்ந்து கவனித்தான். அவள் மூச்சே ஓடவில்லை. அவள் உடம்பில் கை வைத்தான். அவள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. உடல் உயிரற்ற கட்டைபோல் கிடந்தது.

அவள் ஆவியை ஏதோ பாழும் பேயோ, பூதமோ ஆட் கொண்டிருக்க வேண்டும். அவன் அவ்வளவு கதி கலங்கியும் குழந்தை போலத் தன் செயலற்றும் காணப்பட்டாள். பணியாள் விளக்குடன் வந்தான். உகான் இன்னும் ஆட அசையவில்லை, பயம் இன்னும் அவளை விட்ட பாடில்லை. கெஞ்சி படுக்கையை மறைத்து ஒரு தட்டியிட்டு, பணியாளை வரும்படி கட்டளை யிட்டான். கெஞ்சியை அத்தகைய ஒரு பொதுப் பணியாளர் நேரடியாக அடுத்துப் பணிசெய்வது அரண்மனை முறை மையல்ல. இதை எண்ணி அப்பணியாள் படுக்கை அமைந்திருந்த மேடையில் ஏறவே தயங்கினான். ஆனால் கெஞ்சியின் குரல் மீண்டும் பணித்தது. 'இங்கே வா.. உன் சொந்த அறிவைப் பயன்படுத்து'என்றான்.

தயங்கித் தயங்கிப் பணியாள் விளக்கை நேரே கெஞ்சியிடம் கொடுத்தான். அதைப் படுக்கைக்கு மேலே தூக்கி அணங்கின் மீது ஒளி படும்படி காட்டினான். அவன் மீண்டும் தன் கண்களை நம்பமுடியவில்லை. கனவில் அவன் கண்டதாக நினைத்த அதே உருவம் அணங்கை அச்சுறுத்திக்கொண்டு தலையணை மீதே அமர்ந்திருந்தது. ஒரு கணம்தான் அவன் இக்காட்சியைக் கண்டான். அடுத்தகணம் அது மறைந்தது.

இத்தகைய தோற்றங்களைப் பற்றியும் அவற்றின் பேராற்றல் பற்றியும் அவன் பழங்கதைகளில் வாசித்திருந்தான். ஆகவே அவனும் கலவரமடைந்தான். ஆனால் அந்தக் கணத்தில் அவன் அச்சம் படுக்கையில் ஆடாது அசையாது கிடந்த அணங்குக் காகவே. அவளைப் பற்றிய கவலையில் அவன் உருவத்தின் பயங்கரத் தோற்றத்தை மனத்திலிருந்து அகற்றிவிட்டு, அவள் அருகே படுத்த வண்ணம் அவள் உடலுறுப்புகளை அசைத் தாட்டி உயிர்ப்பு வருவிக்க முயன்றான். ஏனென்றால் இதற்குள்ளாக அவை படிப்படியாகக் குளிர் தட்டத் தொடங்கிவிட்டன. மூச்சின்