பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

||-

அப்பாத்துரையம் - 22

விளக்கு மிக மங்கலாக எரிந்தது. அதை அவன் தூண்டினான். நடு அறையின் மூலையில் தட்டிக்குப்பின் எதுவோ அசைவதுபோலத் தோன்றிற்று. இதோ அது மீண்டும் வந்தது. ஆனால் இப்போது ஆங்காங்கே மெல்லக் காலடிகள் எடுத்துவைக்கும் அடங்கிய ஓசை மற்றொரு மூலையில் மற்றொருபுறம் செவிகளில் ஒலித்தது! இவ்ஒலி விட்டு விட்டுத் தொடர்ந்தது சிலசமயம் பின்புறமாக வந்து சென்றது..!

கோரெமிட்சுவும் இதற்குள் திரும்பி வந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஆனால் கால்கள் எங்கும் பாவாத நாடோடி அவன். அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து எவ்வளவோ நேரம் வீணாயிற்று. இந்த இரவு விடியாதா? இது பன்னிரண்டு மணி நேரத்தில் முடியும் இரவல்ல, ஆயிர ஆண்டு நீடிக்கும் இரவு போலும்!' என்று கெஞ்சி வியப்புற்றான்.

இப்போது எங்கேயோ, நெடுந்தொலைவில் ஒரு சேவல்

கூவிற்று.

கெஞ்சியின் உள்ளம் பலவகையிலும் குமுறிற்று.

'ஊழ் என்னை ஏன் இவ்வளவு கடுமையான சோதனை களுக்கு உள்ளாக்குகிறதோ, அறியேன்!' ஒரு வேளை என்மீது இப்போது மோதுகின்ற இந்தப் பயங்கரப்புயல் என் தகாக்காதல் விளையாட்டுகளுக்குரிய தண்டனைதானே? சென்ற சில ஆண்டுகளாக, என் இயல்புக்கே மாறாக, பெரியோரால் தவறென்று விலக்கப்பட்ட, விசித்திரப் பாதையிலே சென்று, என்னையுமறியாமல் இந்த நிகழ்ச்சிகளில் சிக்கிவிட்டேனே! அந்தோ, இத்தகைய காரியங்களை ஒருவன் சிலகாலம் இரகசியமாக அடக்கிவைக்க முடியலாம். முடிவில் அவை வெளிப்பட்டே தீருமன்றோ?

'முன்னோ, பின்னோ, என்றாவது ஒருநாள் இதையும் இதுபோன்ற பிற நிகழ்ச்சிகளையும் சக்கரவர்த்தி அறிய நேரலாம். இதை எண்ணியே நான் மிகமிக நடுங்குகிறேன். இதுமட்டுமோ? பொதுமக்கள் அலர் தூற்றல், இகழ்ச்சியுரை வேறு இருக்கிறது!' என்று எல்லாரும் அறிவார்கள். சாக்கடைச் சிறுவர் முதல் என்னை நையாண்டி செய்து மகிழ்வார்கள்.